Home
Mobile

எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. ரூ.8,999 போதும்.. 6000mAh பேட்டரி.. 30W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த போன்?

மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 6000எம்ஏஎச் பேட்டரி, மீடியாடெக் சிப்செட், பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது மோட்டோ ஜி24 பவர் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

மோட்டோ ஜி24 பவர் அம்சங்கள் (moto g24 Power specifications): 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸபிளே வசதியுடன் இந்த அசத்தலான மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் டிஸ்பிளேவில் 1612 x 720 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ (20:9 aspect ratio), 500 நிட்ஸ் ப்ரைட்னஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. ரூ.8,999 போதும்.. எந்த போன்?

தரமான மீடியாடெக் ஹீலியோ ஜி85 (Octa Core MediaTek Helio G85)சிப்செட் வசதியுடன் இந்த மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு அருமையாக இருக்கும். குறிப்பாக ஹீலியோ ஜி85 சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். இதுதவிர ஆர்ம் மாலி-ஜி52 2EEMC2 (ARM Mali-G52 2EEMC2 GPU) கிராபிக்ஸ் கார்டு இதில் வருகிறது.

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

My UX சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் ஐபி52 ரேட்டிங் கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோ ஸ்மார்ட்போன். இதுதவிர ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், எஃப்எம் ரேடியோ உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளுடன் இந்த மோட்டோ ஜி24 பவர் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ என்கிற டூயல் ரியர் கேமரா உடன் இந்த மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனேவ இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

6000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 30W ஃபாஸ்ட் டர்போபவர் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.ஐஸ் ப்ளூ (Ice Blue) மற்றும் கிளாசியர் ப்ளூ (Glacier Blue) நிறங்களில் மோட்டோ ஜி24 பவர் போன் வெளிவந்துள்ளது.

எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. ரூ.8,999 போதும்.. எந்த போன்?

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) வசதியைக் கொண்டுள்ளது மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன். மேலும் டூயல் 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன். மோட்டோ ஜி24 பவர் போனின் எடை 197 கிராம் ஆகும்.

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி24 பவர் போனை ரூ.8,999 விலையிலும், இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்டை ரூ.9,999 விலையிலும் வாங்க முடியும். மோட்டோரோலா மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) தளங்களில் வரும் பிப்ரவரி 7-ம் தேதி வாங்க முடியும். அதேபோல் இந்த போனுக்கு அறிமுக சலுகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G24 Power Launched in India: check specifications, price, sale date
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X