இன்னைக்கு ஆர்டர் அள்ளுமே.. ரூ.8,999 போதும்.. 50MP கேமரா.. LCD டிஸ்பிளே.. புதிய மோட்டோ போன்.. எநத மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு கொண்டுவர உள்ளது. அதாவது இந்த போனை பிளிப்கார்ட் தளத்தில் மதியம் 12 மணி அளவில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை விரிவாகப் பார்க்கலாம்.
அதாவது 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி24 பவர் போனின் விலை ரூ.8,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.9,999-ஆக உள்ளது. அதேபோல் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் இந்த போனுக்கு எக்ஸ்சேஞ் போனஸ் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோ ஜி24 பவர் அம்சங்கள் (moto g24 Power specifications): மீடியாடெக் ஹீலியோ ஜி85 (Octa Core MediaTek Helio G85) சிப்செட் வசதியுடன் இந்த மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஹீலியோ ஜி85 சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். இதுதவிர கேமிங் பயனர்களை கவரும் வகையில் ஆர்ம் மாலி-ஜி52 2EEMC2 (ARM Mali-G52 2EEMC2 GPU) கிராபிக்ஸ் கார்டு இதில் உள்ளது.
அதேபோல் மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில்விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன் My UX சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் ஐபி52 ரேட்டிங் கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோ ஸ்மார்ட்போன். இதுதவிர ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், எஃப்எம் ரேடியோ உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளுடன் இந்த மோட்டோ ஜி24 பவர் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸபிளே வசதியுடன் இந்த அசத்தலான மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் டிஸ்பிளேவில் 1612 x 720 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ (20:9 aspect ratio), 500 நிட்ஸ் ப்ரைட்னஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ என்கிற டூயல் ரியர் கேமரா உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். ஐஸ் ப்ளூ (Ice Blue) மற்றும் கிளாசியர் ப்ளூ (Glacier Blue) நிறங்களில் மோட்டோ ஜி24 பவர் போன் வெளிவந்துள்ளது.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) வசதியைக் கொண்டுள்ளது மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன். மேலும் டூயல் 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன். மோட்டோ ஜி24 பவர் போனின் எடை 197 கிராம் ஆகும்.


Click it and Unblock the Notifications








