பட்டைய கிளப்பும் மோட்டோரோலா.. 50எம்பி கேமரா.. 256ஜிபி மெமரி.. இரண்டு போன்கள் ரெடி.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் மோட்டோ ஜி24 பவர் மற்றும் மோட்டோ ஜி34 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு புதிய மோட்டோ ஸ்மார்ட்போன்களின் புகைப்படங்கள் தற்போது ஆன்லைனில் கசிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி மோட்டோ ஜி24 பவர் (Moto G24 Power) மற்றும் மோட்டோ ஜி34 (Moto G34) ஸ்மார்ட்போன்கள் எல்இடி பிளாஸ் ஆதரவு கொண்ட டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளன. அதேபோல் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே வசதியுடன் இந்த இரண்டு போன்களும் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மோட்டோ ஜி24 பவர் ஆனது 4ஜி ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

ஆனால் மோட்டோ ஜி34 ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவுடன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த இரண்டு ஸ்மாரட்போன்களும் தனித்துவமான அம்சங்களுடன் கம்மி விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போன்களின் சில அம்சங்களைப் பார்ப்போம்.
மோட்டோ ஜி24 பவர் அம்சங்கள்: 6.5-இன்ச் கர்வ்ட் எட்ஜ் டிஸ்பிளே வசதியுடன் இந்த மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 50எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி கேமரா உடன் இந்த மோட்டோ ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் இந்த போனின் எடை மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது.

குறிப்பாக சில்வர் மற்றும் ப்ளூ நிறங்களில் இந்த மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த போனின் வலது பக்கத்தில் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் உள்ளது. மேலும் யூ.எஸ்.பி-சி சார்ஜிங் போர்ட் மற்றும் ஹெட்ஃபோன் ஜாக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன்.
அதேபோல் 5000எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் இந்த மோட்டோ ஜி24 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
மோட்டோ ஜி34 அம்சங்கள்: லைட் ப்ளூ மற்றும் கிரே நிறங்களில் இந்த மோட்டோ ஜி34 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதேபோல் 50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி34 ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா உடன் மோட்டோ ஜி34 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த மோட்டோ ஜி34 போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக 5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது மோட்டோ ஜி34 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, யூ.எஸ்.பி-சி சார்ஜிங் போர்ட், ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த மோட்டோ ஜி34 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
குறிப்பாக ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போனுக்கு போட்டியாகத் தான் இந்த மோட்டோ ஜி34 மற்றும் மோட்டோ ஜி24 பவர் வெளிவர உள்ளன. எனவே இந்த இரண்டு மோட்டோ ஸ்மார்ட்போன்களும் மிகவும் கம்மி விலையில் வெளிவரும் என்பதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
photo courtesy:mysmartprice


Click it and Unblock the Notifications








