இந்தியாவில் 50எம்பி கேமராவுடன் மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! பட்ஜெட் விலை.! விற்பனை தேதி?
இந்தியாவில் மிகவும் எதிர்பார்த்த மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் 50எம்பி கேமரா, மீடியாடெக் சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த சாதனம் வரும் ஏப்ரல் 13-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும்.

மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 20:9 என்ற திரைவிகிதம், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 என்ற திரைவிகிதம், 720x1,600 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட் வசதியுடன் IMG PowerVR GE8320 GPU வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுவெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் காஸ்மிக் பிளாக், ஐஸ்பர்க் ப்ளூ, மின்ட் கிரீன்
உள்ளிட்ட நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன்.

குறிப்பாக மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக்கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றம் பல்வேறு கேமரா அம்சங்களும் இவற்று அடக்கம்.

மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 20 வாட் டர்போபவர் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் மற்றும் பல சென்சார் ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதேபோல் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி5.0, எஃப்எம் ரேடியோ, ஜிபிஎஸ்ஃஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 185 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications