Home
Mobile

50எம்பி கேமரா, 6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் புதிய மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது

மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் மேக்ஸ்விஷன் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு720x1,600
பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ந்த புதிய ஸ்மா

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு
மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன் மாடலில்

புதிய மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன் மாடலில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட் உடன் PowerVR GE8320 GPU ஆதரவும் உள்ளது. எனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்போன் MyUX skin சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனி

மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றம் பல்வேறு கேமரா அம்சங்களை
கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

 5000 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 15 வாட் பாஸ்ட்
சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் உட்பட பல்வேறு சிறப்ப அம்சங்களுடன் இந்த மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 டூயல் பேண்ட் வைஃபை

4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை 801.11a/b/g/n/ac,புளூடூத் வி5, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக மோட்டோ ஜி22 ஸ்மார்போனின் விலை EUR 169.99 (இந்திய மதிப்பில் ரூ.14,270) ஆக உள்ளது. மேலும் இந்த சாதனம் விரைவில் அனைத்து நாடுகளிலும் விற்பனைக்கு வரும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Moto G22 With MediaTek Helio G37 SoC Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X