பட்ஜெட் விலையில் வரும் மோட்டோ ஜி22: 50 எம்பி குவாட் ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி!
மோட்டோரோலா ஜி22 ஸ்மார்ட்போன் என்ற மற்றொரு சாதனத்தை ஜி சீரிஸ் தொடரில் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது கடந்த மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையை மையமாக வைத்து வருகிறது. இந்த சாதனம் ஒற்றை வேரியண்ட் விருப்பத்தில் வரும் என கூறப்படுகிறது. மோட்டோ ஜி22 வெளியீட்டு தேதி குறித்த தகவல் உறுதியாகியுள்ளது.

மோட்டோ ஜி22 இந்திய வெளியீடு
மோட்டோ ஜி22 இந்திய வெளியீட்டு குறித்து பார்க்கையில், மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனானது அடுத்த வாரத் தொடக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என 91மொபைல்ஸ் தெரிவித்துள்ளது. இருப்பினும் வெளியீடு தேதியை நிறுவனம் தெரிவிக்கவில்லை. இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடானது ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 8 வரை வரக்கூடும் என நிறுவனம் தெரிவிக்கிறது. மோட்டோ ஜி22 சாதனத்தின் வெளியீடு குறித்து நிறுவனம் விரைவில் டீஸ் செய்யத் தொடங்கும் என கூறப்படுகிறது.

மோட்டோ ஜி22 சிறப்பம்சங்கள்
மோட்டோ ஜி22 சிறப்பம்சங்கள் மற்றும் வடிவமைப்பு வெளிப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டுக் காலவரிசையைத் தவிர உலகளாவிய மாறுபாட்டுடன் கொண்டிருக்கும் சில முக்கிய அம்சங்களை கொண்டிருக்கும் என அறிக்கை தகவல் தெரிவிக்கிறது. மோட்டோ ஜி22 பாக்ஸி வடிவமைப்பு மற்றும் பஞ்ச் ஹோல் கட்அவுட் வடிவைப்போடு செல்பி கேமரா வசதி இருக்கும். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் குவாட் கேமராக்கள் இருக்கும் என கூறப்படுகிறது. இதன் முதன்மை சென்சார் எல்இடி ஃப்ளாஷ் உடன் இணைக்கப்பட்ட மேற்புற பகுதி இருக்கும். பிற மூன்று சென்சார்கள் அதன் கீழே இருக்கும். சாதனத்தின் நடுவில் மோட்டோரோலா லோகோ இருக்கும்.

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதி
மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன் ஆனது 1600 x 720 பிக்சல்கள் தீர்மானத்தோடு எச்டி ப்ளஸ் தீர்மானம் மற்றும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.5 இன்ச் மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே ஆதரவோடு வரும். மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட் வசதியோடு வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் என கூறப்படுகிறது. இந்த சாதனத்தில் மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது குவாட் கேமராக்கள் உடன் 50 எம்பி பிரைமரி லென்ஸ், 8 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் ஒரு ஜோடி 2 எம்பி கேமராக்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

16 எம்பி செல்பி கேமரா
மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்பி வசதிக்கு என 16 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த சாதனமானது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் ஆதரவோடு வரும் என கூறப்படுகிறது. இந்த மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி யூனிட்டைக் கொண்டிருக்கும். இதில் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இடம்பெறாது என தகவல்கள் தெரிவிக்கிறது. மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனானது 4ஜி, ப்ளூடூத், யூஎஸ்பி டைப் சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது.

90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே
இந்தியாவில் மோட்டோ ஜி22 எதிர்பார்க்கப்படும் விலை விவரங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை தற்போது வரை நிர்ணயம் செய்யப்படவில்லை. இந்த மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன் ஐரோப்பிய சந்தையில் கிடைப்பதால் இதனுடன் ஒப்பிட்டு இந்திய ஸ்மார்ட்போன் விலையை பார்க்கலாம். மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் விருப்பங்களில் கிடைக்கும். இதன் அடிப்படை மாடல் விலை ரூ.14,000 ஆக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனானது காஸ்மிக் ப்ளேஸ், ஐஸ்பெர்க் ப்ளூ மற்றும் பேர்ல் ஒயிட் வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வரும். இந்த சாதனமானது பட்ஜெட் விலையில் பெரிய பேட்டரி மற்றும் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே உடன் சிறந்த வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications