Home
Mobile

ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் சிப்செட் வசதியுடன் வெளிவரும் மோட்டோ ஜி200.!

மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோ ஜி200 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவரும். அதேபோல் மோட்டோ ஜி200 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்படிராகன் சிப்செட்,108எம்பி ரியர் கேமரா, பாஸ்ட் சார்ஜிங் வசதி எனப் பல்வேறு சிற்பான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த மோட்டோ ஜி200 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோ ஜி200

மோட்டோ ஜி200

மோட்டோ ஜி200 ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் எல்சிடி எஃப்எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர்10 மற்றும்
சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 888

மோட்டோ ஜி200 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் கேமிங் வசதிக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் மிகவும் வேகமாக செயல்படும். அதேபோல் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ய மோட்டோ ஜி200 ஸ்மார்ட்போனின்

இந்த புதிய மோட்டோ ஜி200 ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். அதேபோல் இந்த சாதனம் தனித்துவமான கேமரா அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி200 ஸ்மார்ட்போன் ஆனது

இந்த புதிய மோட்டோ ஜி200 ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

5000 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோ ஜி200 ஸ்மர்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். இதுதவிர கைரேகை ஸ்கேனர் மற்றும் பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான மோட்டோ ஜி200.

 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத்,

அதேபோல் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சாதனம் ரூ.37,500-விலையில் வெளிவரும் என்றுத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி51

மோட்டோ ஜி51

மேலும் சமீபத்தில் இந்நிறுவனம் சீனாவில் புதிய மோட்டோ ஜி51 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. அதாவதுமோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 720 x 1600 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஒசி சிப்செட் வசதி
ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது மோட்டோ ஜி51 5ஜி .

 மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போ

குறிப்பாக மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பிசெல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

5ஜி ஆதரவு, புளூடூத் 5.2, வைஃபை 6

அதேபோல் 5ஜி ஆதரவு, புளூடூத் 5.2, வைஃபை 6, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளைகொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Moto G200 May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X