Home
Mobile

144ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், எஸ்டி888+ எஸ்ஓசி சிப்செட் உடன் மோட்டோ ஜி200 ஸ்மார்ட்போன்- தயாராக இருங்கள்!

மோட்டோரோலா மோட்டோ ஜி71, மோட்டோ ஜி51 மற்றும் மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருகிறது. மூன்று ஸ்மார்ட்போன்களும் சமீபத்தில் இந்தியாவில் பிஐஎஸ் சான்றிதழில் காணப்பட்டன. ஆரம்பத்தில் சர்வதேச சந்தையில் மோட்டோ ஜி200 மற்றும் மோட்டோ ஜி41 உடன் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோ ஜி200 ஸ்மார்ட்போன்

மோட்டோ ஜி200 ஸ்மார்ட்போன்

இந்த நிலையில் மோட்டோ பிராண்ட் மோட்டோ ஜி200 நாட்டில் அறிமுகப்படுத்தும் என சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. சமீபத்தில் அறிமுகப்பட்ட சாதனங்களில் இது மிகவும் ப்ரீமியம் மாடல் ஆக இருக்கிறது. அதேபோல் மோட்டோ ஜி41 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்த தகவல் தெளிவாக தெரியவில்லை.

மோட்டோ ஜி200 இந்திய அறிமுகம்

மோட்டோ ஜி200 இந்திய அறிமுகம்

மோட்டோ ஜி200 இந்திய அறிமுகம் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888+ எஸ்ஓசி உடன் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என டெபாயன் ராய் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மோட்டோரோலா ஜி200 ஆக இருக்கும் எனவும் வரவிருக்கும் மோட்டோரோலா போனின் வெளியீட்டு நிகழ்வு நவம்பர் 30 ஆம் தேதி நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறிது தாமதம் ஏற்பட வாய்ப்பு

சிறிது தாமதம் ஏற்பட வாய்ப்பு

டிப்ஸ்டர் தகவலில் மற்றொரு டுவிட்டை பகிர்ந்து இருக்கிறார், மோட்டோ ஜி200 இந்திய வெளியீட்டில் சிறிது தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டார். இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் மோட்டோரோலா ஜி200 இந்திய வெளியீடு டிசம்பர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. மூன்று ஜி சீரிஸ் சாதனங்களுடன் தனியாக சாதனம் அதிகாரப்பூர்வமாக இருக்குமா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.

மோட்டோ ஜி200 இந்திய ஸ்மார்ட்போன் அம்சங்கள்

மோட்டோ ஜி200 இந்திய ஸ்மார்ட்போன் அம்சங்கள்

மோட்டோரோலா வரவிருக்கும் மோட்டோ ஜி200 குறித்து எந்த தகவலையும் பகிரவில்லை. இந்த சாதனம் முன்னதாகவே சர்வதேச சந்தையில் கிடைப்பதால் அதன் விரிவான அம்சங்கள் குறித்து பார்க்கலாம். உலக சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் கிடைப்பதால் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய மாறுபாடு அம்சமும் இதற்கு ஒத்ததாகவே இருக்கும் என கூறப்படுகிறது.

6.8 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

6.8 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

மோட்டோ ஜி200 ஸ்மார்ட்போனானது 6.8 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1080 x 2460 பிக்சல்கள்) IPS LCD டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888+ எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் எனவும் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு மூலம் இயங்கும் எனவும் கூறப்படுகிறது.

ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்

ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்

அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 108 எம்பி முதன்மை கேமரா, 16 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளிட்ட மூன்று பின்புற கேமரா அமைப்புகளை கொண்டிருக்கிறது. மோட்டோ ஜி200 ஸ்மார்ட்போனானது 16 மெகாபிக்சல் செல்பி கேமராவை பஞ்ச் ஹோல் கட்அவுட் வசதியோடு வரும் என கூறப்படுகிறது. பிற அம்சங்கள் குறித்து பார்க்கையில், ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் ஆதரவோடு 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டிருக்கும் எனவும் 5000 எம்ஏஎச் பேட்டரி 5ஜி இணைப்பு ஆதரவை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை

இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை

மோட்டோ ஜி200 இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை குறித்து பார்க்கையில், இது சர்வதேச சந்தையில் EUR 449 ஆக இருக்கிறது. இந்திய விலை மதிப்புப்படி ரூ.37,700 ஆக இருக்கிறது. வரி காரணமாக ஐரோப்பா சந்தையில் இந்திய சந்தையை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இந்திய விலை குறைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது. இந்திய விலை மதிப்புப்படி இந்த ஸ்மார்ட்போன் ரூ.30000 மற்றும் ரூ.35000 விலைப்பிரிவில் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் வெளியீட்டுக்கு பிறகு இதன் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்டி 888+ சிப் செட் மற்றும் 108 எம்பி கேமரா

எஸ்டி 888+ சிப் செட் மற்றும் 108 எம்பி கேமரா

ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்படும் விலை குறித்து பார்க்கையில், இது ஒன்பிளஸ் 9ஆர், ஐக்யூ 7 லெஜண்ட் உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிடும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், எஸ்டி 888+ சிப் செட் மற்றும் 108 எம்பி கேமரா ஆகியவை குறிப்பிடத்தக்க அம்சங்களாக இருக்கும் என கூறப்படுகிறது.

மோட்டோரோலா ஜி31

மோட்டோரோலா ஜி31

91மொபைல்ஸ் அறிக்கையின்படி, மோட்டோரோலா ஜி31 இந்தியாவில் இந்த மாத இறுதியிலோ அல்லது டிசம்பர் மாத தொடக்கத்திலோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என கூறப்படுகிறது. மோட்டோ ஜி200 ஸ்மார்ட்போன் இந்தியா வெளியீடு நவம்பர் 30 அல்லது டிசம்பர் முதல் வாரம், இரண்டாவது வாரத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. மோட்டோரோலா மோட்டோ ஜி31 மற்றும் ஜி200 இரண்டு ஸ்மார்ட்போனையும் ஒன்றாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மோட்டோ ஜி71 மற்றும் ஜி51 சாதனம்

மோட்டோ ஜி71 மற்றும் ஜி51 சாதனம்

அதேபோல் மோட்டோ ஜி31 உடன் பிஐஎஸ் சான்றிதழில் காணப்பட்ட மோட்டோ ஜி71 மற்றும் ஜி51 சாதனத்தின் இந்திய வெளியீடு குறித்து இதுவரை எந்த குறிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் மோட்டோரோலா அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை பகிர்ந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் வரவிருக்கும் மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்களையும் டிப்ஸ்டர் மூலம் பகிரப்பட்டுள்ளது. மோட்டோ ஜி31 விலை விவரங்கள் குறித்து பார்க்கையில் இதன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.14999 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிராண்டில் வேறு எந்த சேமிப்பக மாடலையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Moto G200 India Launch Date Revealed: Might Launching With 108 MP Camera, 144HZ refreshing Rate
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X