பட்ஜெட் விலையில் மோட்டோ ஜி20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ ஜி20 ஸ்மார்ட்போனை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அசத்தலான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. இப்போது மோட்டோ ஜி20 ஸ்மார்ட்போனின் முழு விவரங்களையும் சற்று விரிவாகப் பார்ப்போம்.

6.5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே
மோட்டோ ஜி20 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1600 x 720 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

மோட்டோ ஜி20 ஸ்மார்ட்போன் மாடலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Unisoc T70 சிப்செட் உடன் 2எக்ஸ் கார்டெக்ஸ்-ஏ75 சிபியு ஆதரவும் இடம்பெற்றுள்ளது. எனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றே கூறலாம். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

48எம்பி பிரைமரி சென்சார்
மோட்டோ ஜி20 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோ கால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம். இது தவிர பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளனஇந்த ஸ்மார்ட்போனின் பின்புற கேமராக்கள்.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளன. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

5000 எம்ஏஎச் பேட்டரி
மோட்டோ ஜி20 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி என பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

4ஜி வோல்ட்இ, VoWiFi, dual-band வைஃபை ஏசி, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ ஜி20 ஸ்மார்ட்போன் மாடல்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி20 ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.13,500-ஆக உள்ளது. ஆனால் இதன் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை பற்றி தகவல் இல்லை. அதேபோல் விரைவில் இந்த சாதனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications