ரூ. 10,000 விலையில் எதிர்பார்க்கப்படும் புதிய மோட்டோ ஜி 20 ஸ்மார்ட் போன்.. என்ன ஸ்பெஷல்?

|

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ ஜி 20 ஸ்மார்ட் போன் பற்றிய விவரக்குறிப்புகள் மற்றும் ரெண்டர்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. மோட்டோ ஜி 10 சீரிஸ் வரிசையில் மோட்டோ ஜி 10 க்கு அடுத்தபடியாக இந்தியாவில் மோட்டோ ஜி 10 பவர் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் நுழைவு நிலை விவரக்குறிப்புகளை பேக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் உடன் கூடிய உயர் புதுப்பிப்பு-வீதத் டிஸ்பிளேவுடன் வருகிறது.

யுனிசோக் T700 சிப்செட்டா ?

யுனிசோக் T700 சிப்செட்டா ?

இந்த புதிய மோட்டோ ஜி 20 ஸ்மார்ட்போன் யுனிசோக் T700 சிப்செட் மூலம் ஆல் இயக்கப்படலாம். மோட்டோ ஜி 20 குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி சென்சார் உடன் 5,000 எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த புதிய ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தையில் நம்ப முடியாத மலிவு விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்படும் மலிவு விலை என்ன வரம்பில் இருக்கும் என்பது கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் மோட்டோ ஜி 20 எதிர்பார்க்கப்படும் விலை

இந்தியாவில் மோட்டோ ஜி 20 எதிர்பார்க்கப்படும் விலை

சமீபத்தில் வெளியான டிப்ஸ்ட்டர் சுடன்ஷு தகவலின் படி, இந்த புதிய மோட்டோ ஜி 20 ஸ்மார்ட்போன் சில சிறிய மேம்பாடுகள் மற்றும் தரமிறக்குதல்கள் உடன் வெளிவரும் என்று எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய மோட்டோ ஜி 20 ஸ்மார்ட்போனின் இந்திய விலை சுமார் ரூ. 10,000 க்கு இருக்கும் என்று கூறியுள்ளார். டிப்ஸ்டர் சில ரெண்டர்கள் மற்றும் வரவிருக்கும் தொலைபேசியின் எதிர்பார்க்கப்பட்ட விவரக்குறிப்புகளையும் பகிர்ந்துள்ளார். மோட்டோ ஜி 20 இன் வெளியீட்டு தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பலமான வாட்ஸ்அப் பாதுகாப்பு குறைபாடு: உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படலாம்..திடுக்கிடும் ரிப்போர்ட்..அம்பலமான வாட்ஸ்அப் பாதுகாப்பு குறைபாடு: உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படலாம்..திடுக்கிடும் ரிப்போர்ட்..

மோட்டோ ஜி 20 எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள்

மோட்டோ ஜி 20 எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள்

மோட்டோ ஜி 20 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி எச்டி பிளஸ் உண்ட 720x1,200 பிக்சல்கள் கொண்ட டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 20: 9 விகித விகிதம், 269 பிபிஐ பிக்சல் அடர்த்தி மற்றும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் ஹூட்டின் கீழ், இந்த சாதனம் ஆக்டா கோர் யுனிசோக் T700 சிப்செட் மூலம் இயக்கப்படலாம் என்றும், இது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமரா மற்றும் பேட்டரி

கேமரா மற்றும் பேட்டரி

கேமராவை பொறுத்தவரையில், மோட்டோ ஜி 20 சாதனம் 48 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் உடன் கொண்ட குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கலாம். இதில் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஸ்னாப்பர் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 13 மெகாபிக்சல் கேமராவுடன் வரக்கூடும். ஸ்மார்ட்போன் 5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் 10W சார்ஜிங் ஆதரவுடன் வரக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Moto G20 could be priced at around Rs 10000 in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X