Home
Mobile

மார்கெட் காலி.. பட்ஜெட்ல 24GB ரேம்.. 50MP கேமரா.. 18W சார்ஜிங்.. 5200mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?

மோட்டோ பிரியர்கள் எதிர்பார்க்கும் பட்ஜெட்டில் பிரீமியம் லுக் கொடுக்கும் லெதர் பேனல் மட்டுமல்லாமல், குவாட் பிக்சல் டெக்னாலஜி கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம், 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5200mAh பேட்டரி, 16 ஜிபி விர்ச்சுவல் கொண்ட 8 ஜிபி ரேம், 1 டிபிக்கான மெமரி சப்போர்ட் போன்ற நம்ப முடியாத பீச்சர்களுடன் மோட்டோ ஜி15 (Moto g15) வெளியாகி இருக்கிறது. இந்த மோட்டோ ஜி15 போனின் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

குளோபல் மார்கெட்டில் இந்த மோட்டோ ஜி15 போன் வெளியாகி இருக்கிறது. ஆனால், விலை விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், டிஸ்பிளே, கேமரா, பேட்டரி, சிப்செட், கலர் ஆப்ஷன்களை பார்க்கையில், ரூ.15000 பட்ஜெட்டில் வெளியாவது உறுதியாகும். இந்த பட்ஜெட்டுக்கு என்னென்ன பீச்சர்களை இந்த மோட்டோ கொடுக்கிறது.

மார்கெட் காலி.. பட்ஜெட்ல 24GB ரேம்.. 50MP கேமரா.. 18W சார்ஜிங் போன்!

மோட்டோ ஜி15 அம்சங்கள் (Moto g15 Specifications): இந்த மோட்டோவில் லெதர் பேனல் டிசைனில் கிராவிட்டி கிரே (Gravity Grey), ஐகுவானா கிரீன் (Iguana Green) மற்றும் சன்ரைஸ் ஆரஞ்ச் (Sunrise Orange) ஆகிய கலர்கள் கிடைக்க இருக்கின்றன. இந்த பிரீமியம் லுக் மட்டுமல்லாமல், டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது.

குவாட் பிக்சல் டெக்னாலஜி சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor) கிடைக்கிறது. மெயின் மற்றும் அல்ட்ரா வைடு கேமராவில் ஃபுல்எச்டி (FHD) வீடியோ ஷூட் சப்போர்ட் கிடைக்கிறது. பிக்சட் போகஸ் (Fixed Focus) கொண்ட 8 எம்பி செல்பீ ஷூட்டர் இருக்கிறது.

கேமரா பீச்சர்களை பார்க்கையில், போட்டோ நைட் விஷன் (Photo Night Vision), ஆட்டோ நைட் விஷன் (Auto Night Vision ) மற்றும் பேஸ் ரீடச் (Face Retouch) போன்றவை வருகின்றன. இந்த மோட்டோ ஜி15 போனில் மை யுஎக்ஸ் (My UX) மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட மீடியாடெக் ஹீலியோ ஜி81 அல்ட்ரா (MediaTek Helio G81 Ultra) சிப்செட் வருகிறது.

மார்கெட் காலி.. பட்ஜெட்ல 24GB ரேம்.. 50MP கேமரா.. 18W சார்ஜிங் போன்!

4 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் + 16 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொண்ட வேரியண்ட்கள் இருக்கின்றன. ஆகவே, 24 ஜிபி வரையில் ரேம் பூஸ்ட் கிடைக்கும். இந்த ரேம் வேரியண்ட்களுக்கு 128 ஜிபி மெமரி, 256 ஜிபி மெமரி மற்றும் 512 ஜிபி மெமரி வருகிறது. இந்த மெமரிக்கு பிறகும் 1 டிபிக்கான எஸ்டி கார்டு சப்போர்ட் கிடைக்கிறது.

இந்த மோட்டோ ஜி15 போனில் 6.72 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இந்த எல்சிடி (LCD) டிஸ்பிளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு, 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 391 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. 2 நாட்கள் பேக்கப் கொடுக்கும்படி 5200mAh பேட்டரி வருகிறது.

18W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. லெதர் பேனல் மற்றும் பெரிய பேட்டரி இருப்பதால், 8.17 மிமீ தடிமன் மற்றும் 190 கிராம் எடை வருகிறது. 3.5 மிமீ ஹெட்செட் ஜாக், IP54 வாட்டர் ரெப்பிலன்ட் சப்போர்ட், சைடு-பேசிங் ஃபிங்கர்பிரிண்ட் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வருகின்றன. இந்த மோட்டோ ஜி15 போனை இந்தியாவில் விரைவில் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto g15 With 8GB RAM 5200mAh Battery 18W Charging Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X