ரெடியா இருங்க.. மலிவு விலை.. ஆண்ட்ராய்டு 15.. வருகிறது புதிய மோட்டோ போன்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் அடுத்து மோட்டோ ஜி15 (Moto G15) போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய ஸ்மார்ட்போன் தற்போது கீக்பெஞ்ச் (Geekbench) தளத்தில் காணப்பட்டுள்ளது. எனவே கூடிய விரைவில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
மோட்டோ ஜி15 அம்சங்கள் (Moto G15 Specifications): ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய மோட்டோ ஜி15 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் மாலி ஜி52 எம்சி2 ஜிபியு (Mali G52 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதி இந்த போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 4ஜிபி ரேம், ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 5000எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த மோட்டோ ஜி15 போன் மலிவு விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. தற்போது மோட்டோ ஜி15 போனின் சில அம்சங்கள் தான் வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும். மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ ஜி14 போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
மோட்டோ ஜி14 அம்சங்கள்: 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது மோட்டோ ஜி13 போன். மேலும் 2400×1080 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் பாண்டா கிளாஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
தரமான மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட் யுனிசாக் டி616 ஆக்டோ-கோர் 12என்எம் (UNISOC T616 Octa-Core) பிராசஸர் உடன் மாலி-ஜி57 ஜிபியு ஆதரவு உள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புத்தம் புதிய மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் வெளிவந்தது.
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த அட்டகாசமான மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது. அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஸ்மார்ட்போன்.
அதேபோல் இந்த மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
குறிப்பாக 5000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 20 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
இந்த மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது. மேலும் ஸ்கை ப்ளூ மற்றும் ஸ்டீல் கிரே நிறங்களில் இந்த அட்டகாசமான மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது பிளிப்கார்ட் தளத்தில் இந்த மோட்டோ ஜி14 போன் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








