Home
Mobile

மிரட்டிவிட்டாப்ல.. பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 18W சார்ஜிங்.. FHD+ டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்தியாவில் இருக்கும் மோட்டோ பிரியர்கள் வெயிட்டிங் மோடில் போடும்படி மோட்டோ ஜி15 (Moto g15) மற்றும் மோட்டோ ஜி15 பவர் (Moto g15 Power) மாடல்கள் களமிறங்கி இருக்கின்றன. இதில் மோட்டோ ஜி15 பவர் மாடலானது, ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே, 50 எம்பி மெயின் கேமரா, 1 டிபி மெமரி, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், 6000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களில் பின்னிப்பெடல் எடுத்துள்ளது. இந்த மோட்டோ எங்கு வெளியாகி இருக்கிறது? முழு பீச்சர்கள் எப்படி?

மோட்டோரோலா நிறுவனம் குளோபல் மார்கெட்டில் இந்த மாடல்களை வெளியிட்டு இருக்கிறது. ஆனால், விலை விவரங்களை வெளியிடவில்லை. இருப்பினும், ஐரோப்பிய நாடுகளில் முதலில் விற்பனைக்கு வர இருப்பதால், விலை விவரங்கள் விரைவில் தெரியவரும். இந்த மோட்டோ போன் 4ஜி மாடலாக வெளியாகி இருப்பதால், ரூ.10000 பட்ஜெட்டில் வர வாய்ப்புள்ளது.

மிரட்டிவிட்டாப்ல.. பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 18W சார்ஜ்!

இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் எதிர்பார்க்கலாம். இந்த மோட்டோ ஜி15 பவர் மாடலுக்கு எதிர்பார்ப்பு எகிறி இருக்க காரணம், அந்த மாடலின் டிசைன், பேட்டரி மற்றும் டிஸ்பிளே பீச்சர்களாக இருக்கிறது. பட்ஜெட்டில் ஃபுல்எச்டிபிளஸ் ரெசொலூஷன் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் டிஸ்பிளே வருகிறது. வேகன் லெதர் பேனல் டிசைனில் பிரீமியமாக தெரிகிறது.

மோட்டோ ஜி15 பவர் அம்சங்கள் (Moto g15 Power Specifications): இந்த மேட்டோ போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொடுக்கும் 6.72 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. டிஸ்பிளேவுக்கு ஏற்ப ஆடியோ கிடைக்கிறது.

அதாவது, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மட்டுமல்லாமல், பேஸ் பூஸ்ட் (Bass Boost) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த மோட்டோ ஜி15 பவர் போனின் கேமராவில் குவாட் பிக்சல் டெக்னாலஜி கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் செட்டப் (Dual Rear Setup) வருகிறது.

4 ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. இந்த ரேம் சப்போர்ட்டில் 128 ஜிபி மெமரி, 256 ஜிபி மெமரி மற்றும் 512 ஜிபி மெமரி கொண்ட மூன்று மாடல்கள் வர இருக்கிறது. இந்த ரேம் மற்றும் மெமரி மாடல்களுக்கு கூடுதலாக 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சிலாட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஸ் (Android 15 OS) வரவேற்கும்படி கிடைக்கிறது.

இதுவொரு 4ஜி வேரியண்ட் என்பதால், அதற்கு ஏற்ப பக்கா பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி81 அல்ட்ரா (Octa Core MediaTek Helio G81 Ultra) சிப்செட் வருகிறது. இந்த மோட்டோ ஜி15 பவர் போனில் 8 எம்பி செல்பீ கேமரா, 3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் சைடு-ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டியுடன் ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் வை-பை 802 (Wi-Fi 802) இருக்கிறது. இந்த மோட்டோ பெயருக்கு ஏற்றபடி பவரில் பட்டையை கிளப்பி இருக்கிறது. ஏனென்றால், 6000mAh பேட்டரியுடன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கிறது. ஆகவே, இந்திய மார்கெட்டில் நல்ல வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto g15 Power With 50MP Camera 4GB RAM 6000mAh Battery Announced Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X