Home
Mobile

இவ்ளோ தானா? மார்கெட்டே அதிருது.. ரூ.9,999 போதும்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. மோட்டோ போன் வேற!

வெறும் ரூ.9,999 பட்ஜெட்டில் ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே, 50எம்பி மெயின் கேமரா, யுனிசோக் டி616 சிப்செட், 5,000mAh பேட்டரி என்று பிரம்மாண்ட அம்சங்களுடன் மோட்டோ ஜி14 (Moto G14) போன் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் விற்பனை தேதி, முழு அம்சங்கள் இதோ.

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டே அதிரும்படி மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி14 போன் மலிவான பட்ஜெட்டில் பட்டையை கிளப்பும் அம்சங்களை கொண்டிருக்கிறது. இவ்வளவு கம்மியான பட்ஜெட்டில் டால்பி அட்மோஸ் ஆடியோ தொழில்நுட்பம், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் வரை அப்டேட், 20W டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

ரூ.9,999 போதும்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. மோட்டோ போன் வேற!

அதுமட்டுமல்லாமல், 1 டிபி வரை மெமரி சப்போர்ட், 240Hz டச் சாம்ப்ளிங் ரேட் போன்ற அம்சங்களும் மிரள வைக்கிறது. இந்த போனின் ப்ரீ புக்கிங் நாளை (ஆகஸ்ட் 1) பிளிப்கார்ட்டில் தொடங்குகிறது. இதன்மூலம் புக்கிங் செய்தால் தள்ளுபடி வேறு இருக்கிறது. இந்த நேரத்தில் அந்த போனின் முழு அம்சங்களை தெரிந்து கொள்வோம்.

மோட்டோ ஜி14 அம்சங்கள் (Moto G14 Specifications): இந்த போன் 6.5 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்னும் டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட யுனிசோக் டி616 எஸ்ஓசி (Unisoc T616 SoC) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு மாலி ஜி57 எம்பி2 (Mali-G57 MC2) கிராபிக்ஸ் கார்டு வருவதாக கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வரை அப்டேட் கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வருகிறது. அதோடு 1 டிபி வரை மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

20W டர்போ பவர் (Turbo Power) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரியை ஒருமுறை ஃபுல் சார்ஜ் செய்தால், 34 மணி நேரம் டாக் பேக்கப், 96 மணி நேரம் மியூசிக் பேக்கப், 16 மணி நேரம் வீடியோ பேக்கப் கிடைக்கும். IP54 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor), பேஸ் அன்லாக் (Face Unlock) அம்சங்கள் வருகின்றன. அதோடு டூயல் நானோ சிம் போர்ட், டால்பி அட்மோஸ் ( Dolby Atmos) ஆடியோ சப்போர்ட் உள்ளிட்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த மோட்டோ ஜி 14 ஸ்மார்ட்போன் ஸ்கை ப்ளூ (Sky Blue) மற்றும் ஸ்டீல் கிரே (Steel Grey) கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த போனின் ப்ரீ-புக்கிங் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் பிளிப்கார்ட்டில் தொடங்குகிறது. இதன் விலை ரூ.10,000 முதல் ரூ.11,000 பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட உள்ளது.

இருப்பினும், ரூ.9,999க்கு விற்பனைக்கு வரும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல், அறிமுக சலுகையாக எச்டிஎஃப்சி, எஸ்பிஐ போன்ற வங்கி கார்டுகளுக்கு தள்ளுபடி வழங்கப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனடிப்படையில், வெறும் 9,000 பட்ஜெட்டில் பக்கவான அம்சங்களுடன் கூடிய மோட்டோ ஜி 14 போனை வாங்கிக்கொள்ள முடியும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G14 With UniSoC T616, 50MP Camera, 5000mAh Battery Launch August 1 Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X