Home
Mobile

சொன்ன நம்ப மாட்டீங்க.. ரூ.9000 போதும்.. 1டிபி மெமரி.. 5000mAh பேட்டரி.. வேகன் லெதர் பேனல்.. எந்த மாடல்?

மலிவான பட்ஜெட்டில் வேகன் லெதர் பேக் பேனல் (Vegan Leather Back Panel), ஃபுல்எச்டி பிளஸ் டிஸ்பிளே, 1 டிபி மெமரி சப்போர்ட், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் ஸ்மார்ட்போன் பிரியர்களை தட்டித்தூக்கும் விதமாக மோட்டோ ஜி14 (moto g14) போன் வெளியாகியிருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், இந்தியாவில் கம்மியான பட்ஜெட்டில் கிடைக்கும் போன்களின் அம்சங்களும், டிசைனும் அவ்வளவுவாக நன்றாக இருக்காது. ஆனால், இப்போது கதையே மாறிவிட்டது. ரூ.10,000 பட்ஜெட்டில் பிரீமியம் லூக்கிலும், மிட்-ரேஞ்ச் அம்சங்களிலும் போன்கள் விற்பனைக்கு வருகின்றன. இதனால், மலிவு விலை போன்களில் புதுப்புது அம்சங்களை கொடுப்பதில் ஸ்மார்ட்போன் நிறுவனங்களிடையே பெரும் போட்டியே நடந்து வருகிறது.

ரூ.9000 போதும்.. 5000mAh பேட்டரி.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?

அந்த வகையில் மோட்டோரோலா நிறுவனம், வேகன் லெதர் பேக் பேனல் டிசைனை மலிவு விலை போன்களில் கொடுக்கத் தொடங்கிவிட்டது. அப்படி, வேகன் லெதர் பேக் பேனலோடு பேல் லைலாக் மற்றும் பட்டர் கிரீம் கலரில் மோட்டோ (Moto) ஜி14 போன் பட்டையை கிளப்புகிறது. இந்த போனின் விலை, விற்பனை மற்றும் முழு அம்சங்கள் குறித்த விவரம் பின்வருமாறு.

மோட்டோ ஜி14 அம்சங்கள் (moto g14 specifications): இந்த மோட்டோ போன் 6.5 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு எல்சிடி (LCD) டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 120Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. இதற்கு பாண்ட கிளாஸ் பாதுகாப்பு (Panda Glass Protection) வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா-கோர் யுனிசோக் டி616 12என்எம் (Octa-Core UNISOC T616 12nm) சிப்செட் வருகிறது. அதோடு மாலி - ஜி57 ஜிபியு (Mali-G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த போன் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்ட் கொண்டுள்ளது. அதோடு 1டிபி மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் வருகிறது. ஆகவே, டூயல் நானோ சிம் மற்றும் எஸ்டிகார்டு போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மோட்டோ போன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது. அதன்படி, 50 எம்பி மெயின் (Main) கேமரா + 2 எம்பி மேக்ரோ (Macro) கேமரா வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. 5000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 3.5மிமீ ஆடியோ ஜாக் (3.5mm Audio Jack), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொடுக்ப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Scanner), IP52 தர ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Splash Resistant), டூயல் 4ஜி (Dual 4G) சப்போர்ட், வை - பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப் - சி (USB Type-C) போர்ட் வருகின்றன. மொத்தமாக 177 கிராம் எடை கொண்டுள்ளது.

இந்த போன் ஏற்கனவே வெளியாகி விற்பனையில் சக்கைப்போடு போட்டுவந்த நிலையில், இப்போது வேகன் லெதர் பேக் டிசைனில் 2 புதிய கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், பேல் லைலாக் (Pale Lilac), பட்டர் கிரீம் (Butter Cream) ஆகிய 2 கலர்களில் லெதர் பேக் பேனலோடு விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.9,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பேது, பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. அதோடு ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த போனை ரூ. 9,499க்கு வாங்கிக் கொள்ள முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G14 With Butter Cream, Pale Lilac Vegan Leather Back Variants Specifications Price in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X