Home
Mobile

லிஸ்ட்டு பெருசு.. டால்பி அட்மோஸ், 50MP கேமரா, 5000mAh பேட்டரி.. விலை சிறிசு.. என்ன மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் கடந்த சில மாதங்களில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துவிட்டது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்த அனைத்து போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

அதாவது மோட்டோ ஜி14 (moto g14) எனும் ஸ்மார்ட்போனை தான் அறிமுகம் செய்ய உள்ளது மோட்டோரோலா நிறுவனம். குறிப்பாக மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போனுக்கு அடுத்து இந்த மோட்டோ ஜி14 போன் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இந்த மோட்டோ ஜி14 போன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

மோட்டோ ஜி14: முக்கிய அம்சங்களின் லிஸ்ட்டு பெருசு.. ஆனா விலை சிறிசு!

மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் XT2341 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த போன் ப்ளூ, கிரே,கோல்ட் மற்றும் பீஜ் உள்ளிட்ட நிறங்களில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பஞ்ச்-ஹோல் ஸ்கிரீன், டூயல் ரியர் கேமரா மற்றும் பல அசத்தலான அம்சங்களுடன் இந்த மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளிவரும்.

அதாவது 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமராவுடன் இந்த புத்தம் புதிய மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு இந்த போன் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட் வசதியுடன் இந்த மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். அதாவது இந்த போன் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த மோட்டோ ஜி14 போன் அறிமுகமாகும்.

ஆனால் இந்த மோட்டோ ஜி14 போனுக்கு ஆண்ட்ராய்டு 14 அப்டேட் கூட கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

மோட்டோ ஜி14: முக்கிய அம்சங்களின் லிஸ்ட்டு பெருசு.. ஆனா விலை சிறிசு!

மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த போன் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

இந்த மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 20 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர், டால்பி அட்மோஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த புத்தம் புதிய மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் இந்த போன் கம்மி விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

photo courtesy: thetechoutlook

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G14 with 50MP camera and 5000mAh battery to launch in August : Check Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X