கம்மி விலையில் புதிய போனை இந்தியாவில் இறக்கிவிடும் Motorola.! என்ன மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் தனித்துவமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக விவோ, சியோமி, ஒப்போ நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது மோட்டோரோலா.
குறிப்பாக மோட்டோரோலா நிறுவனத்தின் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் மோட்டோரோலா நிறுவனம் விரைவில் கம்மி விலையில் மோட்டோ ஜி14 எனும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும்.

EEC சான்றிதழ் தளத்தில் இந்த மோட்டோ ஜி14 பட்டியலிடப்பட்டுள்ளது. எனவே இந்த போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
குறிப்பாக XT2341-4 என்ற மாடல் எண் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன். மேலும் இந்த மோட்டோ ஜி14 போன் ஆனது 5ஜி ஆதரவுடன் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த போனின் அம்சங்களை இன்னும் வெளிவரவில்லை. கூடிய விரைவில் இந்த மோட்டோ ஜி14 போனின் அம்சங்கள் வெளிவரும். மேலும் ஏற்கனவே இந்நிறுவனம் அறிமுகம் செய்த மோட்டோ ஜி13 போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

மோட்டோ ஜி13 அம்சங்கள்: 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் இந்த மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. பின்பு இந்த போன் 720 x 1,600 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த மோட்டோ போன் வெளிவந்தது. குறிப்பாக இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.
அதேபோல் மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி85 ப்ராசஸர் (MediaTek Helio G85 SoC) மூலம் இயங்குகிறது. குறிப்பாக இந்த ப்ராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். எனவே இந்த போனை நம்பி வாங்கலாம். பின்பு 'ஸ்லிம்' மற்றும் 'லைட்' ஆன வடிவமைப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஸ்மார்ட்போன். பின்பு இதில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதி உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் 8எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உடனான ஸ்டீரிடோ ஸ்பீக்கர்ஸ், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி52 ரேட்டிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் கம்மி விலையில் வெளிவந்தது இந்த மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications








