50MP கேமரா: கம்மி விலையில் இந்தியாவுக்கு வருகிறது புதிய Moto போன்: இந்த தேதிய குறிச்சு வச்சுக்கோங்க.!
சியோமி நிறுவனத்தைப் போன்று மோட்டோரோலா நிறுவனமும் கம்மி விலையில் அசத்தலான போன்களை அறிமுகம் செய்யத் தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களில் மோட்டோரோலா பல அசத்தலான போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக மோட்டோரோலா போன்களுக்கு இந்தியா நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் மோட்டோரோலா நிறுவனம் விரைவில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி இந்தியாவில் மோட்டோ ஜி14 (moto g14)ஸ்மார்ட்போனை தான் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது மோட்டோரோலா நிறுவனம். குறிப்பாக இந்த போன் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

குறிப்பாக விரைவில் அறிமுகமாகும் இந்த மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் ஆனது அருமையான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆன்லைனில் வெளியான மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
அதாவது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். பின்பு 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் வெளிவரும். ஃபுல் எச்டி டிஸ்பிளே இதில் இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
நோக்கியா போன்களில் அதிகம் இடம்பெறும் யுனிசாக்(Unisoc) சிப்செட் தான் இந்த மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் ஆனது யுனிசாக் டி616 (Unisoc T616) சிப்செட் உடன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த இந்த போனில் ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும்.

குறிப்பாக 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி14 போன். எனவே இந்த போன் ஒரு நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் . பின்பு 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர், டால்பி அட்மோஸ் ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த மோட்டோ போன் வெளிவரும்.
ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனால் விரைவில் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு 14 அப்டேட் கூட கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த போனுக்கு 3 வருட பாதுகாப்பு அப்டேட்களை உறுதி செய்துள்ளது மோட்டோரோலா நிறுவனம். அதேபோல் ப்ளூ மற்றும் கிரே நிறங்களில் இந்த மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் ரூ.10,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








