Home
Mobile

ரூ.9,999 போதும்.. 5000mAh பேட்டரி, 6.5-இன்ச் டிஸ்பிளே.. புதிய நிறங்களில் மோட்டோ போன்.. எந்த மாடல்?

இந்த மாதம் துவக்கத்தில் மோட்டோ ஜி14 (moto g14) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்கை ப்ளூ மற்றும் ஸ்டீல் கிரே நிறங்களில் இந்த மோட்டோ ஜி14 போன் வெளிவந்தது. இந்நிலையில் மீண்டும் புதிய நிறங்களில் மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது மோட்டோரோலா நிறுவனம் அறிவித்த தகவலின்படி, பட்டர் கிரீம் மற்றும் Pale Lilac நிறங்களில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நிறங்கள் கொண்ட மோட்டோ ஜி14 போன் வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் ரூ.9,999-க்கு வாங்கக் கிடைக்கும். மேலும் இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரூ.9,999 போதும்.. புதிய நிறங்களில் மோட்டோ போன்.. எந்த மாடல்?

மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. ஃபுல் எச்டி டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். மேலும் 2400×1080 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் பாண்டா கிளாஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பான டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட் யுனிசாக் டி616 ஆக்டோ-கோர் (UNISOC T616 Octa-Core) 12என்எம் பிராசஸர் உடன் மாலி-ஜி57 ஜிபியு ஆதரவு உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதியுடன் இந்த புத்தம் புதிய மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ள பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த அட்டகாசமான மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 1டிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

இந்த மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 20 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

3.5எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் உள்ளிட்ட வசதிகளுடன் இந்த மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் எடை 177 கிராம். மிகவும் குறைந்த எடையில் இந்த மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன். அதேபோல் மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ எட்ஜ் 40 நியோ, மோட்டோ ஜி54 5ஜி, மோட்டோரோலா ஜி84 5ஜி ஆகிய புதிய போன்களை வரும் வாரங்களில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக மோட்டோ எட்ஜ் 40 நியோ, மோட்டோ ஜி54 5ஜ, மோட்டோரோலா ஜி84 5ஜி போன்கள் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மூன்று போன்களும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G14 launched in new colors in India: check colours availability and more : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X