Home
Mobile

மொத்த மார்க்கெட்டையும் மிரட்டும் விலை.. 50MP கேமரா, 5000mAh பேட்டரியுடன் புதிய Moto போன்.. என்ன மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் மோட்டோ ஜி14 (moto g14) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த போன் கம்மி விலையில் 50எம்பி கேமரா, யுனிசாக் பிராசஸர், ஃபுல் எச்டி டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. ஃபுல் எச்டி டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். மேலும் 2400×1080 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் பாண்டா கிளாஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

50MP கேமரா, 5000mAh பேட்டரியுடன் புதிய Moto போன்.. என்ன மாடல்?

குறிப்பாக மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட் யுனிசாக் டி616 ஆக்டோ-கோர் 12என்எம் (UNISOC T616 Octa-Core) பிராசஸர் உடன் மாலி-ஜி57 ஜிபியு ஆதரவு உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புத்தம் புதிய மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த அட்டகாசமான மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 1டிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனால் 8எம்பி செல்பி கேமராவுக்கு பதில் 13எம்பி கேமரா இடம்பெற்றிருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 20 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

3.5எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் உள்ளிட்ட வசதிகளுடன் இந்த மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் எடை 177 கிராம். மிகவும் குறைந்த எடையில் இந்த மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு
மிகவும் அருமையாக இருக்கும்.

50MP கேமரா, 5000mAh பேட்டரியுடன் புதிய Moto போன்.. என்ன மாடல்?

டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன். மேலும் ஸ்கை ப்ளூ மற்றும் ஸ்டீல் கிரே நிறங்களில் இந்த அட்டகாசமான மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் ரூ.9,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு பிளிப்கார்ட் தளத்தில் இப்போது இந்த ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்யலாம். வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி இந்த மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு
வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G14 has been launched in India at price of Rs.9999 and will go on sale on August 8: check specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X