Home
Mobile

முக்கியமான ஒரு வசதி இல்லாமல் 2 போன்களை பட்ஜெட் விலை அறிமுகம் செய்த Motorola.!

மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோ ஜி13 மற்றும் மோட்டோ ஜ23 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் பட்ஜெட் விலையில் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளன. அதேபோல் இந்த போன்கள் தற்போது ஐரோப்பாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும்.

டிஸ்பிளே அம்சங்கள்

இப்போது இந்த மோட்டோ ஜி13 மற்றும் மோட்டோ ஜ23 ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். இந்த இரண்டு மோட்டோ ஸ்மார்ட்போனகள் 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளன. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன்கள் வெளிவந்துள்ளன.

2 போன்களை பட்ஜெட் விலை அறிமுகம் செய்த Motorola.!

அருமையான கேமரா

மோட்டோ ஜி13 மற்றும் மோட்டோ ஜ23 ஸ்மார்ட்போன்கள் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன்களின் உதவியுடன் தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். பின்பு மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் ஆனது 8எம்பி செல்பி கேமராவைக் கொண்டுள்ளது. ஆனால் மோட்டோ ஜி23 ஸ்மார்ட்போன் 16எம்பி செல்பி கேமராவைக் கொண்டுள்ளது.

மீடியாடெக் சிப்செட்

இந்த இரண்டு மேர்ட்டோ ஸ்மார்ட்போன்களும் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளன. அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளன இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன்கள். எனவே இந்த ஸ்மார்ட்போன்களை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

நிறங்கள்?

மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளிவந்துள்ளன. பின்பு மேட் சார்கோல்இ ரோஸ் கோல்ட் மற்றும் ப்ளூ லாவெண்டர் போன்ற நிறங்களில் இந்த மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மோட்டோ ஜி23 ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது.

2 போன்களை பட்ஜெட் விலை அறிமுகம் செய்த Motorola.!

கைரேகை ஸ்கேனர் ஆதரவு

குறிப்பாக மோட்டோ ஜி23 ஸ்மார்ட்போன் மாடலும் சார்கோல், ரோஸ் கோல்ட் மற்றும் ப்ளூ லாவெண்டர் போன்ற நிறங்களில் கிடைக்கும். குறிப்பாக இந்த இரண்டு புதிய மோட்டோ ஸ்மார்ட்போன்களும் கைரேகை ஸ்கேனர் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பாஸ்ட் சார்ஜிங் வசதி?

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ ஜி13 மற்றும் மோட்டோ ஜ23 ஸ்மார்ட்போன்களில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளன. எனவே சிறந்த பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு மோட்டோ ஜி23 ஸ்மார்ட்போன் ஆனது 30 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. அதேபோல் மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது.

முக்கியமான வசதி இல்லை!

அதேபோல் மோட்டோ ஜி13 மற்றும் மோட்டோ ஜ23 ஸ்மார்ட்போன்களில் முக்கியமான ஒரு வசதி இல்லை. ஆதாவது இந்த போன்களில் 5ஜி வசதி இல்லை, அதற்குப் பதிலாக 4ஜி வசதியுடன் வெளிவந்துள்ளன. பின்பு 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, புளூடூத் 5.1 உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளன இந்த இரண்டு மோட்டோ ஸ்மார்ட்போன்கள்.

2 போன்களை பட்ஜெட் விலை அறிமுகம் செய்த Motorola.!

மோட்டோ ஜி13 மற்றும் மோட்டோ ஜ23 போன்களின் விலை?

4ஜிபி ரேம் கொண்ட மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போனின் விலை EUR 179.99 (இந்திய மதிப்பில் ரூ.16,000) ஆக உள்ளது. பின்பு 8ஜிபி ரேம் கொண்ட மோட்டோ ஜி23 ஸ்மார்ட்போனின் விலை EUR 229.99 (இந்திய மதிப்பில் ரூ.20,500) ஆக உள்ளது. விரைவில் இந்த போன்கள் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த போன்களின் அனைத்து அம்சங்களும் அருமையாக உள்ளது. ஆனால் இவற்றில் 5ஜி இல்லாதது தான் ஒரு குறையாகத் தெரிகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G13, Moto G23 with MediaTek Helio G85 SoC Launched: Specs, Features and More : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X