இந்தியாவில் கம்மி விலையில் 2 போன்களை இறக்கிவிடும் Motorola.! காத்திருப்போம்.!
மோட்டோரோலா நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் மோட்டோரோலா நிறுவனம் இந்தியச் சந்தையில் மோட்டோ ஜி13, மோட்டோ ஜி23 ஆகிய ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்யும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.
குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் கம்மி விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் தற்போது மோட்டோ ஜி13, மோட்டோ ஜி23 ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் கசிந்துள்ளது. இப்போது அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோ ஜி13 டிஸ்பிளே அம்சங்கள்
அதாவது மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். பின்பு 720x1,600 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டோ ஜி13 கேமரா
50எம்பி பிரைமரி கேமரா+ 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும்,வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன்.
மோட்டோ ஜி13 பேட்டரி
மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும். பின்பு 20 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 4ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போன் நீல நிறத்தில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோ ஜி23 டிஸ்பிளே அம்சங்கள்
மோட்டோ ஜி23 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த போன் 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் அறிமுகமாகும். அதேபோல் இந்த போன் தரமான கேமரா வசதியுடன் வெளிவரும்.
மோட்டோ ஜி23 கேமரா வசதி
அதாவது மோட்டோ ஜி23 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி23 ஸ்மார்ட்போன்.
மோட்டோ ஜி23 பேட்டரி
மோட்டோ ஜி23 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 30 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு 8ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ், உள்ளிட்ட பல அசத்தலான வசதிகளுடன் வெளிவரும்.

5ஜி ஆதரவு?
மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள மோட்டோ ஜி13,மோட்டோ ஜி23 ஸ்மார்ட்போன்களில் 5ஜி ஆதரவு கிடையாது இல்லை எனத் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இந்த போன்கள் 4ஜி ஆதரவுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கம்மி விலையில் இந்த போன் வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் இந்த இரண்டு போன்களும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் அறிமுகமாகும்.


Click it and Unblock the Notifications








