Home
Mobile

விலை இவ்ளோதானா! 7000mAh பேட்டரி.. 50MP கேமரா.. அறிமுகமானது புது Moto போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ ஜி100எஸ் (Moto G100s) ஸ்மார்ட்போனை தற்போது அறிமுகம் செய்துள்ளது. 7000mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் சிப்செட், 50எம்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்

மோட்டோ ஜி100எஸ் அம்சங்கள் (Moto G100s Specifications): 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய மோட்டோ ஜி100எஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1050 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), டிசி டிம்மிங், ப்ளூ லைட் புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

விலை இவ்ளோதானா! அறிமுகமானது புது Moto போன்.. எந்த மாடல்?

அதுவும் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 எஸ்ஒசி (Snapdragon 7s Gen 2 SoC) சிப்செட் உடன் மோட்டோ ஜி100எஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்து. எனவே இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் மோட்டோ ஜி100எஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த மோட்டோ ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய போனில் உள்ளது.

50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் என்கி டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோ ஜி100எஸ் ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவும் மோட்டோ ஜி100எஸ் ஸ்மார்ட்போனில் உள்ளது. அதுவும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) ஆதரவுடன் இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விலை இவ்ளோதானா! அறிமுகமானது புது Moto போன்.. எந்த மாடல்?

7000mAh பேட்டரி வசதியுடன் மோட்டோ ஜி100எஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 30W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

அதுவும் வைஃபை, ஜிபிஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய மோட்டோ ஜி100எஸ் ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இந்த புதிய மோட்டோ போன் தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த சாதனம் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும். குறிப்பாக இந்த மோட்டோ ஜி100எஸ் போனின் ஆரம்ப விலை 999 yuan (இந்திய மதிப்பில் ரூ.12,424)-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G100s launched with 7000mAh battery: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X