Moto G100 அறிமுகம்.. விலை மற்றும் முழு சிறப்பம்சம் இது தானா?

|

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோரோலா மோட்டோ ஜி 100 ஸ்மார்ட்போனை ஐரோப்பிய மற்றும் லத்தீன் அமெரிக்கா சந்தைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் எஸ் இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா மோட்டோ ஜி 100 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழு சிறப்பம்ச தகவலை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

மோட்டோரோலா மோட்டோ ஜி 100 ஸ்மார்ட்போன்

மோட்டோரோலா மோட்டோ ஜி 100 ஸ்மார்ட்போன்

மோட்டோரோலா மோட்டோ ஜி 100 ஸ்மார்ட்போன், இப்போது வெறும் ஒற்றை ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாக மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மோட்டோரோலா மோட்டோ ஜி 100 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு €499.99 என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய விலை என்ன?

இந்திய விலை என்ன?

அமெரிக்காவில் இந்த புதிய மோட்டோ ஜி 100 ஸ்மார்ட்போன் வெறும் $ 588 டாலர் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி, இந்த மோட்டோ ஜி 100 ஸ்மார்ட்போன் ரூ. 42,770 ஆகும். இது இரிடெஸண்ட் ஓசன் (Iridescent Ocean) மற்றும் இரிடெஸண்ட் ஸ்கை (Iridescent Sky) வண்ணங்களில் வருகிறது.

அம்பானியை கூட மன்னிச்சுடலாம் ஆனால் இந்த சுல்தானை?!அம்பானியை கூட மன்னிச்சுடலாம் ஆனால் இந்த சுல்தானை?!

மோட்டோ ஜி 100 சிறப்பம்சம்

மோட்டோ ஜி 100 சிறப்பம்சம்

மோட்டோ ஜி 100 ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் எல்சிடி பேனலுடன் 21: 9 விகித விகிதம் கொண்ட 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகித டிஸ்பிளேயுடன் வருகிறது. இந்த டிஸ்பிளே 560 நைட்ஸ் பிரகாசம், எச்டிஆர் 10, டிசிஐ-பி 3 கலர் காமெட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. முன்பே தெரிவித்தது போல் இந்த புதிய மோட்டோ ஜி 100 ஸ்மார்ட்போன் ஆனது ஒற்றை ஸ்டோரேஜ் விருப்பத்துடன் மட்டுமே வருகிறது.

ஸ்டோரேஜ் விபரம்

ஸ்டோரேஜ் விபரம்

இந்த ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், கூடுதல் ஸ்டோரேஜ் பயன்பாட்டிற்காக இந்த புதிய மோட்டோ ஜி 100 ஸ்மார்ட்போனில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் எஸ்.டி கார்டு வழியாக 1 டிபி வரை ஸ்டோரேஜ்ஜை நீடித்துக்கொள்ள முடியும். இந்த புதிய ஸ்மார்ட்போன் 20W பாஸ்ட் சார்ஜிங்கிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்ந்தார்களா? வைரலாகும் கோட்பாடு.. உண்மை இது தான்?செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்ந்தார்களா? வைரலாகும் கோட்பாடு.. உண்மை இது தான்?

கேமரா விபரம்

கேமரா விபரம்

பின்புறத்தில், ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் கேமரா, பி.டி.ஏ.எஃப், எல்.ஈ.டி ஃபிளாஷ், 16 மெகாபிக்சல் 117 ° அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் ஒரு ToF சென்சார் கொண்ட குவாட் கேமெரா அமைப்பை கொண்டுள்ளது. பின்புறத்தில் அமைந்துள்ள நான்கு கேமராக்களும் சதுர வடிவில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், இந்த ஸ்மார்ட்போன் 16 மெகாபிக்சல் மற்றும் 8 மெகாபிக்சல் கொண்ட 118 ° அல்ட்ரா-வைட் கேமராவை ஆதரிக்கிறது.

இணைப்பு அம்சங்கள்

இணைப்பு அம்சங்கள்

மோட்டோ ஜி 100 இல் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் உள்ளது. பிரத்தியேக கூகிள் அசிஸ்டென்ட் பட்டன் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை உள்ளன. இந்த புதிய மோட்டோரோலா மோட்டோ ஜி 100 ஸ்மார்ட்போன் அண்ட்ராய்டு 11 அவுட் ஆப் பாக்ஸ் உடன் இயக்குகிறது. இணைப்பு அம்சங்களை பொறுத்த வரையில் மோட்டோ ஜி 100 ஸ்மார்ட்போன் 5 ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, டூயல் 4 ஜி வோல்டிஇ, வைஃபை 6 802.11 axe, புளூடூத் 5.1, ஜிபிஎஸ் (எல் 1 + எல் 5), என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி ஆகியவற்றுடன் வருகிறது.

Best Mobiles in India

English summary
Moto G100 smartphone launched in European and Latin American markets : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X