மோட்டோ ஜி 100 மார்ச் 25ம் தேதி அறிமுகமா? உறுதியா இதை எல்லாம் எதிர்பார்க்கலாமா?
மோட்டோ ஜி 100 வரும் மார்ச் 25 ஆம் தேதி ஜெர்மனியில் அறிமுகப்படுத்தப்படும் என்று மோட்டோரோலா நிறுவனம் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான ஸ்மார்ட்போன் ரெண்டர்ஸ் தகவலின்படி, இந்த ஸ்மார்ட்போன் கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் எஸ் இன் சர்வதேச பதிப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி 100 vs மோட்டோரோலா எட்ஜ் எஸ் எது ரியல்?
மோட்டோ ஜி 100 என்று கூறப்படும் ரெண்டர்கள், மோட்டோரோலா எட்ஜ் எஸ் மற்றும் செவ்வக கேமரா தொகுதியில் வைக்கப்பட்டுள்ள குவாட் ரியர் கேமரா அமைப்பு போன்ற டூயல் பஞ்ச் ஹோல் கட் அவுட் வடிவமைப்பைக் காட்டுகின்றது. ஆனால், விவரக்குறிப்புகள் மோட்டோரோலா எட்ஜ் எஸ் போலவே இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோ ஜி100 ஸ்மார்ட்போன் மாடலை மார்ச் 25 ஆம் தேதி அறிமுகம் செய்யவிருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது.

மோட்டோ ஜி100 - ஸனாப்டிராகன் 870 சிப்செட்
சமீபத்திய தகவலின்படி இந்த மோட்டோ ஜி100 ஸ்மார்ட்போன் ஆனது ஸனாப்டிராகன் 870 சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மோட்டோரோலா தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் தளத்தில் இந்த மோட்டோ ஜி100 டீஸர் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் இந்த மோட்டோ ஜி100 வெளியீட்டு தேதி பற்றிய தகவல் இதில் குறிப்பிடப்படவில்லை. விரைவில் வெளிவரும் மோட்டோ ஜி100 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட், யூ.எஸ்.பி-சி போர்ட், ஆடியோ ஜாக், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது.

அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்
இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் மோட்டோ ஜி100 என்ற பெயரில் தான் மற்ற சந்தைகளில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட சில சந்தைகளில் மோட்டோரோலா எட்ஜ் எஸ் என்ற பெயரில் இது அறிமுகமாகக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டோ ஜி100 ஸ்மார்ட்போன் மாடல் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. இது 2520×1080 பிக்சல் தீர்மானம் கொண்ட 90Hz டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

மோட்டோ ஜி100 ஸ்டோரேஜ் வேரியண்ட் விபரம்
இது எச்டிஆர் 10 ஆதரவு, சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்ட கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு அம்சத்துடன் வெளியாகிறது. இந்த மோட்டோ ஜி100 ஸ்மார்ட்போனில் 6ஜிபி / 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி / 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. கூடுதல் ஸ்டோரேஜ் விருப்பத்திற்காக இதில் எஸ்.டி கார்டு அம்சத்துடன் ஸ்டோரேஜ் நீட்டிப்பு ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 11 சார்ந்த Motorola MyUI இயங்குதளத்தைக் கொண்டுள்ளது.

மிரட்டலான குவாட் கேமரா அமைப்பு
கேமராவை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி சென்சார், 16எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், ToF stereoscopic டெப்த் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கத்தில் 16எம்பி மற்றும் 8எம்பி கொண்ட டூயல் செல்பீ கேமரா வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி
மோட்டோ ஜி100 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவர வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 20 வாட் டர்போ சார்ஜிங் ஆதரவுடன் வெளிவர கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5 ஜி, டூயல் 4 ஜி, வோல்டிஇ, VoWi-Fi, வைஃபை 6, புளூடூத் 5.2, ஜிபிஎஸ் மற்றும் ஒரு யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications