Motorola Moto G10 Power, Moto G30 மார்ச் 9ல் அறிமுகம்.. இவ்வளவு குறைவான விலையை எதிர்பார்க்கலாமா?

|

மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் மோட்டோ ஜி 10 பவர் மற்றும் மோட்டோ ஜி 30 என்ற இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை மோட்டோ ஜி தொடரின் கீழ் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தியது. இப்போது இந்த இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களும் மார்ச் 9ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. |குறிப்பாக இவை பட்ஜெட் விலைக்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோ ஜி 10 பவர் மற்றும் மோட்டோ ஜி 30

மோட்டோ ஜி 10 பவர் மற்றும் மோட்டோ ஜி 30

டிப்ஸ்டர் முகுல் சர்மாவின் கூற்று படி, மோட்டோ ஜி 10 பவர் மற்றும் மோட்டோ ஜி 30 ஸ்மார்ட்போன்கள் மார்ச் முதல் வாரத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், தற்பொழுது மார்ச் 9ம் தேதி மதியம் ௧௨ மணிக்கு ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் இரண்டும் சர்வதேச மாடல்களின் அதே விவரக்குறிப்புகளையும், அதே சிறப்பம்சங்களையும் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி 30 ஸ்மார்ட்போன்

மோட்டோ ஜி 30 ஸ்மார்ட்போன்

மோட்டோ ஜி 30 ஸ்மார்ட்போன் பாஸ்டல் ஸ்கை மற்றும் பாண்டம் பிளாக் நிறத்திலும், மோட்டோ ஜி 10 பவர் அரோரா கிரே மற்றும் இரைடிசென்ட் பேர்ல் நிறத்திலும் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டோ ஜி 30 ஸ்மார்ட்போன் ஐரோப்பாவில் 180 யூரோ என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின்படி இது தோராயமாக ரூ.15,900 ஆகும்.

மோட்டோ ஜி 10 பவர் ஸ்மார்ட்போன்

மோட்டோ ஜி 10 பவர் ஸ்மார்ட்போன்

அதேபோல், மோட்டோ ஜி 10 பவர் ஸ்மார்ட்போன் ஐரோப்பா சந்தையில் 150 யூரோ என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.13,300 மட்டுமே இருக்கும் என்று டிப்ஸ்டர் குறிப்பிட்டுக் கூறியுள்ளார். பட்ஜெட் விலையில் சிறந்த சிறப்பம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைக்கும் பயனர்கள் அடுத்த மாதம் வரை பொறுத்திருக்கலாம்.

மோட்டோ ஜி 30 சிறப்பம்சம்

மோட்டோ ஜி 30 சிறப்பம்சம்

  • 6.5' இன்ச் 1600 x 720 பிக்சல்கள் கொண்ட எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே
  • 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்
  • மைக்ரோ எஸ்.டி கார்டு ஆதரவு
  • ஸ்னாப்டிராகன் 662 சிப்செட்
  • குவாட்-கேமரா அமைப்பு
  • 64 எம்.பி பிரைமரி கேமரா
  • 8 எம்பி அல்ட்ராவைடு ஆங்கிள் சென்சார்
  • 2 எம்பி மேக்ரோ சென்சார்
  • பேட்டரி
    • 2 எம்பி டெப்த் சென்சார்
    • 13 எம்.பி செல்ஃபி கேமரா
    • 4 ஜி
    • வைஃபை
    • புளூடூத் 5.0
    • என்எப்சி
    • ஜிபிஎஸ்
    • 3.5 ஆடியோ ஜாக்
    • யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
    • 20W வேகமான சார்ஜிங் ஆதரவு
    • 5,000 எம்ஏஎச் பேட்டரி
    • மோட்டோ ஜி 10 பவர் சிறப்பம்சம்

      மோட்டோ ஜி 10 பவர் சிறப்பம்சம்

      • 6.5' இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே
      • 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்
      • ஸ்னாப்டிராகன் 460 சிப்செட்
      • குவாட்-கேமரா அமைப்பு
      • 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
      • 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார்
      • 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார்
      • பேட்டரி
        • 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
        • 8 மெகாபிக்சல் செல்பி கேமரா
        • 4 ஜி
        • வைஃபை
        • புளூடூத் 5.0
        • என்எப்சி
        • ஜிபிஎஸ்
        • 3.5 ஆடியோ ஜாக்
        • யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
        • 10W வேகமான சார்ஜிங் ஆதரவு
        • 5,000 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Moto G10 Power and Moto G30 launch in India will take place at 12pm on March 9 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X