மோட்டோ ஜி10, மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்.!
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ ஜி10 மற்றும் மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போன்களை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் ஐபி 52 மதிப்பீட்டைக் கொண்டு நீர் எதிர்ப்பு வடிவமைப்போடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அனைத்து சந்தைகளிலும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போனின் விலை EUR 180 (இந்திய மதிப்பில் ரூ.15,900) மற்றும் மோட்டோ ஜி10 ஸ்மார்ட்போனின் விலை EUR 150 (இந்திய மதிப்பில் ரூ.13,300) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சாதனங்களின் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

மோட்டோ ஜி30 டிஸ்பிளே
மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1600 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி இவற்றுள் அடக்கம். பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

மோட்டோ ஜி30 கேமரா
மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் +2எம்பி டெப்த் சென்சார்+ 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. மேலும் 13எம்பி செல்பீ கேமரா ஆதரவு இவற்றுள் அடக்கம். குறிப்பாக ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

மோட்டோ ஜி30 பேட்டரி
மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 20 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. மேலும் 4ஜி, வைஃபை, புளூடூத் 5.0, என்எப்சி, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப் சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

மோட்டோ ஜி10 டிஸ்பிளே
மோட்டோ ஜி10 ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 60Hz refresh rate மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி இவற்றுள் அடக்கம்.

மோட்டோ ஜி10 கேமரா
மோட்டோ ஜி10 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவு இவற்றுள்; அடக்கம். குறிப்பாக ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

மோட்டோ ஜி10 பேட்டரி
மோட்டோ ஜி10 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. மேலும் 4ஜி, வைஃபை, புளூடூத் 5.0, என்எப்சி, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப் சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications