மார்க்கெட்ல புயலை கிளப்ப போகுது.. மலிவு விலை.. 5100mAh பேட்டரி.. வருகிறது புதிய Moto போன்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த மோட்டோ ஜி05 (Moto G05) ஸ்மார்ட்போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் மோட்டோ 06 (Moto G06) எனும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது மோட்டோரோலா நிறுவனம். அதாவது Geekbench தளத்தில் இந்த போன் காணப்பட்டுள்ளது. அதுவும் XT2535-3 என்ற மாடல் நம்பர் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி06 போன்.
எனவே வரும் வாரங்களில் இந்த புதிய மோட்டோ ஜி05 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. அதேபோல் இந்த புதிய மோட்டோ போன் கம்மி பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த மோட்டோ ஜி06 போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

மோட்டோ ஜி06 அம்சங்கள் (Moto G06 Specifications): மீடியாடெக் ஜி81 எக்ஸ்ட்ரீம் எஸ்ஒசி (MediaTek's Helio G81 Extreme SoC) சிப்செட் உடன் மோட்டோ ஜி06 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் இந்த மோட்டோ போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
அதேபோல் 5100mAh பேட்டரி வசதியுடன் மோட்டோ ஜி06 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 10W சார்ஜிங் வசதியும் உள்ளது. பான்டோன் டேபஸ்ட்ரி (Pantone Tapestry), டென்ட்ரில் (Tendril) நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும்.
4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி வசதியுடன் இந்த மோட்டோ ஜி06 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். தற்போது மோட்டோ ஜி06 ஸ்மார்ட்போனின் சில விவரங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும். மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ ஜி05 போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
மோட்டோ ஜி05 அம்சங்கள் (Moto G05 Specifications): 6.67-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் ஆஸ்பெக்ட் ரேஷியோ (20:9 aspect ratio), 1000 நிட்ஸ் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3 protection), 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.
ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி81-அல்ட்ரா (Octa Core MediaTek Helio G81-Ultra) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி05 போன். மேலும் ஏஆர்எம் மாலி-ஜி52 எம்பி2 ஜிபியு (ARM Mali-G52 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். குறிப்பாக மேம்பட்ட செயல்திறன் வழங்கும் இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட்.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி05 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு அதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த மோட்டோ ஜி05 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos),எப்எம் ரேடியோ உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த அசத்தலான மோட்டோ ஜி05 போனில் உள்ளன.
5200mAh பேட்டரி உடன் இந்த மோட்டோ ஜி05 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and Splash resistant) கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி05 போன். மேலும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அதேபோல் ஃபாரெஸ்ட் கிரீன் மற்றும் பிளம் ரெட் நிறங்களில் இந்த போனை வாங்கலாம். மேலும் ரூ.6,999 விலையில் மோட்டோ ஜி05 போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








