ரெடியா இருங்க.. ரூ.12,366 பட்ஜெட்ல வருகிறது புதிய Moto ஸ்மார்ட்போன்.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் விரைவில் மோட்டோ ஜி06 (moto g06) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய போன் முதலில் ஐரோப்பாவில் தான் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதன்பின்பு தான் இந்தியாவில் அறிமுகமாகும். இந்நிலையில் மோட்டோ ஜி06 போனின் சில விவரக்குறிப்புகள் கசிந்துள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
மோட்டோ ஜி06 அம்சங்கள்: 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த புதிய மோட்டோ ஜி06 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

லாவெண்டர் (Lavender), கிரீன் (green) மற்றும் ரோஸ் நிறங்களில் இந்த புதிய மோட்டோ ஜி06 ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் ரூ.12,366 விலையில் இந்த மோட்டோ ஜி06 ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த போனின் சில விவரங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து விவரங்களும் வெளியாகும். மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ ஜி05 போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
மோட்டோ ஜி05 அம்சங்கள் (Moto G05 Specifications): ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி81-அல்ட்ரா (Octa Core MediaTek Helio G81-Ultra) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி05 போன். மேலும் ஏஆர்எம் மாலி-ஜி52 எம்பி2 ஜிபியு (ARM Mali-G52 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
6.67-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் ஆஸ்பெக்ட் ரேஷியோ (20:9 aspect ratio), 1000 நிட்ஸ் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3 protection), 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.
குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி05 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு அதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் 50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த மோட்டோ ஜி05 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack),
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos),எப்எம் ரேடியோ உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த அசத்தலான மோட்டோ ஜி05 போனில் உள்ளன.
5200mAh பேட்டரி உடன் இந்த மோட்டோ ஜி05 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and Splash resistant) கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி05 போன். மேலும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
அதேபோல் ஃபாரெஸ்ட் கிரீன் மற்றும் பிளம் ரெட் நிறங்களில் இந்த போனை வாங்கலாம். தற்போது இந்த மோட்டோ ஜி05 போன் ரூ7,299 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








