தூக்கி பாக்கெட்ல போடுவீங்க.. மட்ட ரேட் ரூ.7499 க்கு 7000mAh பேட்டரி, 50MP கேமரா.. 18W சார்ஜிங்குடன் Moto போன்!
மோட்டோரோலா (Motorola) நிறுவனத்தின் மோட்டோ ஜி06 பவர் (Moto g06 Power) ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் விற்பனையில் பட்டையை கிளப்பி வருகிறது. ரூ.7,499 பட்ஜெட்டில் இந்த மோட்டோ ஜி06 பவர் ஆனது 7000mAh பேட்டரியை கொடுப்பது மட்டுமல்லாமல், 50 எம்பி கேமரா, ஹீலியோ ஜி81 அல்ட்ரா போன்ற பீச்சர்களின் அதிரவிட்டு இருக்கிறது.
இந்த மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்போனின் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலையானது 20 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.7,999 ஆக இருக்கிறது. மேலும், யுபிஐ பேமெண்ட் (UPI Payment) வழியாக ஆர்டர் செய்தால் ரூ.550 தள்ளுடியுடன் வாங்க கிடைக்கிறது. ஆகவே, 4 ஜிபி ரேம் வேரியண்ட் ஆனது ரூ.7,499 விலைக்கு கிடைக்கிறது.

மோட்டோ ஜி06 பவர் அம்சங்கள் (Moto g06 Power Specifications): கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பை கொடுக்கும் 6.88 இன்ச் (1640 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைத்து இருக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா மற்றும் செகண்டரி கேமராவை இந்த மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போன் கொடுத்துள்து. வீடியோ கால்கள் மற்றும் செல்பீகளுக்கு 8 எம்பி முன்பக்க கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு ஏகப்பட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன. இதில் நைட் விஷன் மோட் (Night Vision Mode) மற்றும் ஆட்டோ நைட் விஷன் (Auto Night Vision) இருக்கிறது.
மேலும், போட்டோ அன்பிளர் (Photo Unblur) மற்றும் போர்ட்ராய்டு பிளர் (Portrait Blur) செய்து கொள்ளலாம். எடிட்டர் (Magic Editor) கிடைக்கிறது. போர்ட்ராய்டு லைட் (Portrait Light) மற்றும் ப்ரோ மோட் (Pro Mode) உள்ளிட்ட கேமரா பீச்சர்களையும் இந்த மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் உடன் 2 வருட செக்யூரிட்டி அப்கிரேட் வருகிறது.
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி81 அல்ட்ரா (Octa Core MediaTek Helio G81 Ultra) சிப்செட்டை இந்த மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. அதேபோல மாலி ஜி52 எம்பி2 ஜிபியு (Mali G52 MP2 GPU) கிராபிக்ஸ் சப்போர்ட்டை கொண்டுள்ளது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 7000mAh பேட்டரி மற்றும் டைப்-சி சார்ஜிங் சப்போர்ட்டை கொடுத்து உள்ளது.
இந்த மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போன் ஸ்லிம் மாடலாக இருக்காது, ஆகவே, 8.82 எம்எம் தடிமன் கொண்டுள்ளது. 220 கிராம் எடை கொடுத்துள்ளது. IP64 ரேட்டிங்குடன் டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது. சைடு மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொண்டுள்ளது.
டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆடியோ மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கொடுத்துள்ளது. டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 801.11 (Wi-Fi 802.11) மற்றும் ப்ளூடூத் 6.0 (Bluetooth 6.0) உள்ளது. இந்த மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போனை டெண்ட்ரில் (Tendril), டேபஸ்ட்ரி (Tapestry) மற்றும் லாரல் ஓக் (Laurel Oak) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








