ஆர்டர் பிச்சிக்குது.. 35 சதவீத ஆஃபரில் 7000mAh பேட்டரி Moto போன்.. 18W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா!
பட்ஜெட் விலையில் பெரிய பேட்டரி மாடல்களை களமிறக்குவதில் மோட்டோ நிறுவனமும் பட்டையை கிளப்பி வருகிறது. பேட்டரி மட்டுமல்லாமல், கேமரா, டிசைன் உள்ளிட்ட பீச்சர்களிலும் கவனம் செலுத்துவதால், நல்ல வரவேற்பும் பெற்றுள்ளது. இதில் 7000mAh பேட்டரி கொண்ட மோட்டோ ஜி06 பவர் (moto g06 power) ஸ்மார்ட்போன் தள்ளுபடியில் கிடைக்கிறது.
4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 35 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.12,999 விலைக்கு வாங்க கிடைக்கிறது. இந்த தள்ளுபடி போக தகுதி வாய்ந்த கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.650 தள்ளுபடியும் கொடுக்கப்பட்டு, ரூ.12,349 விலையில் இப்போது வாங்கி கொள்ள கிடைக்கிறது. எக்ஸ்சேஞ்ச், ஈஎம்ஐ சலுகைகளும் உள்ளன.

பான்டோன் டென்ட்ரில் (Pantone Tendril), பான்டோன் டேப்பஸ்ட்ரி (Pantone Tapestry) மற்றும் பான்டோன் லாரல் ஓக் (Pantone Laurel Oak) ஆகிய மூன்று கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். வீகன் லெதர் பேனல் டிசைனில் கிடைப்பதால், இந்த பட்ஜெட்டில் பிரீமியம் லுக் எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு இது ஏற்ற மாடலாக இருக்கும். மற்ற பீச்சர்களும் பட்டையை கிளப்புகின்றன.
மோட்டோ ஜி06 பவர் அம்சங்கள் (moto g06 power Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி81 அல்ட்ரா (Octa Core MediaTek Helio G81 Ultra) சிப்செட்டை இந்த மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஆர்ம் மாலி ஜி52 எம்பி2 ஜிபியு (Arm Mali G52 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாதபடி கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சனை கொடுத்துள்ளது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.88 இன்ச் (1640 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், 263 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் வாட்டர் டச் சப்போர்ட் கொண்ட டிஸ்பிளேவாக இது இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor) கொண்ட ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு ஃபுல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. எப்/1.8 அபெர்சர கொடுக்கப்பட்டு உள்ளது.
நைட் விஷன் மோட் (Night Vision Mode), ஆட்டோ நைட் விஷன் (Auto Night Vision), லைவ் பில்டர் (Live Filter), போர்ட்ராய்டு (Portrait), ப்ரோ மோட் (Pro mode), போட்டோ அன்பிளர் (Photo Unblur), மேஜிக் எடிட்டர் (Magic Editor), போர்ட்ராய்ட் பிளர் (Portrait Blur), போர்ட்ராய்டு லைட் (Portrait Light), ஸ்கை (Sky), கலர் பாப் (Color Pop), சினிமாடிக் போட்டோஸ் (Cinematic Photos) பீச்சர்கள் உள்ளன.
எப்/2.0 அபெர்சருடன் 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. 8.82 எம்எம் தடிமன் மற்றும் 220 கிராம் எடை கொடுக்கப்பட்டு உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொண்ட மாடலாக இந்த மோட்டோ ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications