Home
Mobile

மட்ட ரேட்ல 7000mAh பேட்டரி, 50MP கேமரா.. பிளிப்கார்ட் ஆஃபரில் கிடைக்கும் மோட்டோ ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் மலிவான விலைக்கு 7000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை மோட்டோரோலா நிறுவனம் களமிறக்கி இருக்கிறது. பெரிய பேட்டரியை கொடுத்தது மட்டுமல்லாமல், 50 எம்பி கேமரா, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சன் டிஸ்பிளே, 1 டிபிக்கான மெமரி சப்போர்ட் கொடுத்துள்ளது.

பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போனுக்கு 7 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.12,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.650 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.12,349 விலைக்கு இந்த மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

மட்ட ரேட்ல 7000mAh பேட்டரி, 50MP கேமரா.. பிளிப்கார்ட் ஆஃபர்!

மோட்டோ ஜி06 பவர் அம்சங்கள் (Moto g06 Power Specifications): கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சன் கொண்ட 6.88 இன்ச் (1640 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. ஓரளவுக்கு அவுட்புட் கொடுக்க ஆர்ம் மாலி ஜி52 எம்பி2 ஜிபியு (ARM Mali G52 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

மேலும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுத்து இருக்கிறது. பட்ஜெட் மாடலுக்கு ஏற்ப 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் இந்த மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி81 அல்ட்ரா (Octa Core MediaTek Helio G81 Ultra) சிப்செட் கொடுத்துள்ளது.

யுனிசோக் சிப்செட்டை எதிர்பார்க்கும் பட்ஜெட்டில் மீடியாடெக் சிப்செட் கிடைப்பதால், பர்ஃபாமென்ஸ் பட்டையை கிளப்பும்படி இருக்கும். 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கிடைத்துள்ளது. 1 டிபிக்கு மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு பயன்படுத்தும்படி சிலாட் கிடைக்கிறது. டூயல் நானோ சிம் சிலாட் கொடுக்கப்பட்டு உள்ளது.

குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி செல்பீ கேமராவை இந்த மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. 8.82 எம்எம் தடிமன் மற்றும் 220 கிராம் எடையுடன் 7000mAh பேட்டரியை இந்த மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.

மேலும், 18W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கிடைக்கிறது. இதற்கு டைப்-சி சார்ஜிங் (Type - C) சப்போர்ட் உள்ளது. ஆனால், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மட்டுமே கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மட்டுமல்லாமல் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட்டை இந்த மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) வருகிறது. பான்டோன் டென்ட்ரில், பான்டோன் டேப்ஸ்ட்ரி மற்றும் பான்டோன் லாரல் ஓக் ஆகிய கலர்களில் வாங்கி கொள்ளலாம். டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 6.0 (Bluetooth 6.0) உள்ளது.

Best Mobiles in India

English summary
Moto g06 Power With 7000mAh Battery 7 Percent Discount Sale on Flipkart Check Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X