Home
Mobile

முரட்டு ஆஃபர்.. வெறும் ரூ.7,599 க்கு வந்த 7000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 120 Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் மலிவான விலைக்கு அறிமுகம் செய்யப்படுவதால் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. கூடுதலாக பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடியும் கிடைப்பதால் விற்பனையில் சக்கைப்போடு போடுகின்றன. மோட்டோ ஜி06 பவர் (moto g06 Power) ஸ்மார்ட்போன் இப்போது, தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. இந்த மோட்டோ ஜி06 பவர் மாடலின் பீச்சர்கள் மற்றும் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 20 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.7,999 விலைக்கு 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. மேலும், ரூ.400 தள்ளுபடி தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.7,599 விலைக்கு இந்த மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

முரட்டு ஆஃபர்.. வெறும் ரூ.7,599 க்கு வந்த 7000mAh பேட்டரி.. மாடல்?

மோட்டோ ஜி06 பவர் அம்சங்கள் (Moto g06 Power Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி81 அல்ட்ரா (Octa Core MediaTek Helio G81 Ultra) சிப்செட்டை இந்த மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஆர்ம் மாலி ஜி52 எம்பி2 ஜிபியு (ARM Mali G52 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுத்து உள்ளது.

6.88 இன்ச் (1640 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுத்துள்ளது. இந்த அடிமட்ட பட்ஜெட் விலையிலும், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பை கொடுத்துள்ளது.

4 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், 4 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் கிடைத்துள்ளது. மேலும், 64 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. 50 எம்பி மெயின் கேமராவை இந்த மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.

மெயின் கேமராவில் குவாட் பிக்சல் டெக்னாலஜி கொடுக்கப்பட்டு உள்ளது. டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) கிடைக்கிறது. மேலும், மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கொடுக்கப்பட்டு உள்ளது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. மேலும், டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆடியோ உள்ளது.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) இந்த மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போனில் கிடைத்துள்ளது. IP64 ரேட்டிங்குடன் டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) கொடுக்கப்பட்டு உள்ளது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மற்றும் டைப்-சி சார்ஜிங் (Type - C) சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரி கிடைக்கிறது.

பெரிய பேட்டரி கிடைப்பதால் 8.82 எம்எம் தடிமன் உள்ளது. மேலும், 220 கிராம் எடை கொண்டுள்ளது. டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac), ப்ளூடூத் 6.0 (Bluetooth 6.0) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டிகள் கிடைக்கின்றன. டென்ட்ரில், டேப்ஸ்ட்ரி மற்றும் லாரல் ஓக் ஆகிய மூன்று கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto g06 Power With 50MP Camera 4GB RAM 20 Percent Discount in Flipkart Check Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X