ஆளுக்கு 2 ஆர்டர்.. ரூ.7000 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. 50MP கேமரா.. 120Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் அடிச்சு புடிச்சு ஆர்டர் போடும்படியான பட்ஜெட்டில் மோட்டோ ஜி06 பவர் (Moto g06 Power) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 7000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 50 எம்பி கேமரா மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே கொடுக்கிறது. இந்த மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை தள்ளுபடி போக ரூ.7,499ஆக இருக்கிறது. இதுபோக யுபிஐ மூலம் ஆர்டர் செய்தால் ரூ.350 கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.7,149 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். கிட்டத்தட்ட ரூ.7,000 பட்ஜெட்டிலேயே 7000mAh பேட்டரியை கொடுத்து இருக்கிறது.

மோட்டோ ஜி06 பவர் அம்சங்கள் (Moto g06 Power Specifications): இந்த மோட்டோ ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி81 அல்ட்ரா (Octa Core MediaTek Helio G81 Ultra) சிப்செட் கிடைக்கிறது. ஆர்ம் மாலி ஜி52 எம்பி2 ஜிபியு (ARM Mali G52 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது.
2 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. இந்த மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போனில் 6.88 இன்ச் (1640 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் கிடைக்கிறது. 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த அடிமட்ட பட்ஜெட்டிலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சன் கிடைக்கிறது. அதேபோல 64 ஜிபி மெமரிக்கு மேல் 1 டிபிக்கு மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் கிடைக்கிறது.
இந்த மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா + செகண்டரி லென்ஸ் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கிறது. இந்த கேமராவில் போட்டோ அன்பிளர் (Photo Unblur), மேஜிக் எடிட்டர் (Magic Editor) மற்றும் போர்ட்ராய்டு பிளர் (Portrait Blur) கிடைக்கிறது.
மேலும், போர்ட்ராய்டு லைட் (Portrait Light), நைட் விஷன் மோட் (Night Vision Mode), ஆட்டோ நைட் விஷன் (Auto Night Vision) மற்றும் ப்ரோ மோட் (Pro Mode) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. 7000mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 220 கிராம் எடை வருகிறது. 8.82 எம்எம் தடிமன் கிடைக்கிறது.
கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சன் மட்டுமல்லாமல், IP64 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. இதில் பிளாஸ்டிக் ஃபிரேம் மட்டுமே கொடுக்கப்படுகிறது. இருப்பினும், வீகன் லெதர் பேனல் கொடுக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கிறது.
மேலும், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டைப்-சி சார்ஜிங் மற்றும் சைடு-மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கிடைக்கிறது. டெண்ட்ரில் (Tendril), டேபஸ்ட்ரி (Tapestry) மற்றும் லாரல் ஓக் (Laurel Oak) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டைவிட கூடுதலாகவே பீச்சர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








