பொளக்குது விற்பனை.. வெறும் ரூ.12,349 போதும்.. 7000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 18W பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
பட்ஜெட் விலையில் பிரீமியம் லுக் கொடுத்தது மட்டுமல்லாமல், 7000mAh பேட்டரி, 50 எம்பி கேமரா, 18W பாஸ்ட் சார்ஜிங் போன்ற பக்கா பீச்சர்களையும் கொடுத்தால் விற்பனையில் பட்டையை கிளப்பாமல் இருக்க முடியுமா? என்று கேட்கும்படி மோட்டோ ஜி06 பவர் (moto g06 power) ஸ்மார்ட்போனின் விற்பனை இருக்கிறது.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.15,999ஆக இருக்கிறது. பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.3,650 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.12,349 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு, ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.3,000 தள்ளுபடி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆகவே, ரூ.12,999 விலைக்கு இந்த மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். பிளிப்கார்ட் எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.800 தள்ளுபடி கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், நோ-காஸ்ட் ஈஎம்ஐ மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களுக்கு பிளிப்கார்ட் தளத்தை அணுகலாம். இந்த பட்ஜெட்டில் பீச்சர்களும் பட்டையை கிளப்புகின்றன.
மோட்டோ ஜி06 பவர் அம்சங்கள் (moto g06 power Specifications): இந்த பட்ஜெட்டுக்கு யுனிசோக் சிப்செட்டை பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் கொடுக்கின்றன. ஆனால், ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி81 அல்ட்ரா (Octa Core MediaTek Helio G81 Ultra) சிப்செட்டை இந்த மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போன் பேக் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) வருகிறது.
ஆர்ம் மாலி ஜி52 எம்பி2 ஜிபியு (ARM Mali G52 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. 6.88 இன்ச் (1640 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சன் பேக் செய்யப்பட்டு இருக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.
மேலும், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 4 ஜிபி ரேம் கிடைத்தாலும், 4 ஜிபிக்கு விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சப்போர்ட் கிடைக்கிறது. அதேபோல 64 ஜிபிக்கு மேல் ஸ்டோரேஜ் தேவைப்பட்டால், 1 டிபிக்கு மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கான சிலாட் மற்றும் டுயல் நானோ சிம் சிலாட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா மற்றும் செல்பீ & வீடியோ கால்களுக்காக 8 எம்பி ப்ரன்ட் கேமரா கிடைக்கிறது. இந்த மெயின் கேமராவுக்கு குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரியை கொடுக்கிறது. பேட்டரியுடன் 8.82 எம்எம் தடிமன் கொடுத்துள்ளது.
மேலும், 220 கிராம் எடை கொண்ட மாடலாக இந்த மோட்டோ ஜி06 பவர் இருக்கிறது. டைப்-சி (Type - C) சார்ஜிங் போர்ட் மற்றும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கிடைக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) பேக் செய்யப்பட்டு இருக்கிறது.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கிடைக்கிறது. டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி உள்ளது. வை-பை 802 (Wi-Fi 802) மற்றும் ப்ளூடூத் 6.0 (Bluetooth 6.0) உள்ளது. பான்டோன் டென்ட்ரில், பான்டோன் டேப்ஸ்ட்ரி, பான்டோன் லாரல் ஓக் கலர்கில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications