மார்க்கெட்டை மெர்சல் ஆக்கிய Motorola.. வெறும் ரூ.8999 க்கு 7000mAh பேட்டரி, IP64.. நம்பி வாங்க 3 காரணங்கள்!
புதிய ஸ்மார்ட்போன்களை வாங்குபவர்கள்.. 5000mAh அல்லது 5500mAh பேட்டரிகளை கொண்ட ஸ்மார்ட்போன்களை "போகிற போக்கில்" தவிர்க்கும் அளவிற்கு, இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 'பிக் பேட்டரி' போன்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. ஆனால் மோட்டோரோலா நிறுவனம் இந்த டிரெண்ட்-ஐ கடந்த ஆண்டே கணித்து விட்டது
இந்நிறுவனம் கடந்த 2025 அக்டோபர் மாதத்திலேயே ரூ.10000 க்குள் என்கிற பட்ஜெட்டில் 7000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து, இந்திய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டை மிரள விட்டது. அது மோட்டோ ஜி06 பவர் (Moto G06 Power) ஸ்மார்ட்போனாகும். சுவாரசியமாக, பல நிறுவனங்கள் தத்தம் ஸ்மார்ட்போன்களின் விலைகளை அதிகரித்துள்ள நிலையிலும் கூட மோட்டோ ஜி06 பவர் மாடலானது இன்னமும் ரூ.10000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தான் வாங்க கிடைக்கிறது.

இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் இது, பிளிப்கார்ட் (Flipkart) வலைதளத்தில் தற்போது ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதே ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் வழியாகவும் வாங்க கிடைக்கிறது. ஆனால் அங்கே து ரூ.9143 க்கு பட்டியலிடப்பட்டு உள்ளது.
மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டூயல் சிம் ஆதரவு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஹலோ யுஐ கொண்டு இயங்குகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.88-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120ஹெர்ட்ஸ் வரை ரெப்ரெஷ் ரேட், 395பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸையும் கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷனையும் பெறுகிறது.
சிப்செட்டை பொருதாவரி மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி81 எக்ஸ்ட்ரீம் சிப்செட்டை கொண்டுள்ளது. இது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கூடவே மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 1டிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவையும் கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை, மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போன் ஆனது எப்/1.8 அபெர்க்ஷர் கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் கேமராவை கொண்டுள்ளது. செல்பீகள் மற்றும் வீடியோ கால்களுக்கு, இது எப்/2.0 அபெர்க்ஷர் ண்ட 8-மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது. பிளாஸ்டிக் பிரேம் மற்றும் வீகன் லெதர் பேக் பேனல் உடன் வரும் இந்த பட்ஜெட் மாடலில் கூகுளின் ஜெமினி ஏஐ அசிஸ்டென்ட்டிற்கான ஆதரவும் உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போன் ஆனது 18W சார்ஜிங் ஆதரவுடன் 7,000mAh பேட்டரியை கொண்டுள்ளது (நிறுவனத்தின் 20W சார்ஜருடன் பயன்படுத்தப்படும்போது). மோட்டோரோலா நிறுவனத்தின் கூற்றுப்படி இதன் பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 65 மணிநேரம் வரை பிளேபேக் நேரத்தை வழங்கும்.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை 220 கிராம் எடை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 4ஜி LTE, வைஃபை 802.11 a/b/g/n/ac, ப்ளூடூத் 6.0, ஜிபிஎஸ், க்ளோனாஸ், கலிலியோ, QZSS மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகிய கனெக்ட்விட்டி ஆப்ஷன்களை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் தூசி மற்றும் நீர் தெறிப்பு எதிர்ப்பிற்கான IP64 ரேட்டிங்கும் உள்ளது. இது டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளது. கடைசியாக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சாரையும் கொண்டுள்ளது.
மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போனை நம்பி வாங்க 3 காரணங்கள்:
1. இது இரண்டு நாட்கள் வரையிலான பேட்டரி லைஃப்பை தாராளமாக வழங்குகிறது.
2. க்ளீன் ஆன, கிட்டத்தட்ட-ஸ்டாக் ஆண்ட்ராய்டு எக்ஸ்பீரியன்ஸை வழங்குகிறது
3. வீடியோ ஸ்ட்ரீமிங் ஆர்வலர்களை கவர்ந்திழுக்கும் பெரிய டிஸ்பிளேவை கொண்டுள்ளது
மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போனை வாங்காமல் தவிர்க்கவும் 2 காரணங்கள் உள்ளன:
1. இது "காலாவதியான" டியர் ட்ராப் டிஸ்பிளேவை கொண்டுள்ளது; லேட்டஸ்ட் டிசைனை எதிர்பார்ப்பவர்கள் ஏமாற்றம் அடையலாம்.
2. நடுத்தரமான கேமராக்களையே கொண்டுள்ளது; போட்டோகிராஃபி ஆர்வலர்கள் ஏமாற்றம் அடையலாம்.


Click it and Unblock the Notifications








