பிளிப்கார்ட் அதிரடி.. ஆபரில் Moto ஸ்மார்ட்போன்.. 50எம்பி கேமரா.. IP64 ரேட்டிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் big bachat days எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோ ஜி06 பவர் (moto g06 power) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
அதாவது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போனுக்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.7,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

மோட்டோ ஜி06 பவர் அம்சங்கள் (moto g06 power Specifications): 6.88-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இதன் டிஸ்பிளேவில் 1640 × 720 பிக்சல்ஸ், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்,கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3 protection), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
ஆக்டோ-கோர் மீடியடெக் ஹீலியோ ஜி81-அல்ட்ரா (Octa Core MediaTek Helio G81-Ultra) சிப்செட் உடன் இந்த புதிய மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏஆர்எம் மாலி-ஜி52 எம்பி2 ஜிபியு (ARM Mali-G52 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதியுடன் மோட்டோ ஜி06 பவர் போன் விற்பனைக்கு வருகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய மோட்டோ போனில் உள்ளது.
ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகமானது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது.
50எம்பி ரியர் கேமராவுடன் வெளிவந்துள்ளது மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல சிறப்பான கேமரா அம்சங்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant), 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன. டென்ட்ரில் (Tendril), டேபஸ்ட்ரி (Tapestry) மற்றும் லாரல் ஓக் (Laurel Oak) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
7000mAh பேட்டரி வசதியுடன் மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 6.0, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட் பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications








