தீபாவளி ட்ரீட்.. நாளைக்கு கொடுக்கும் Motorola.. கம்மி பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் நாளை (அக்டோபர் 7) மோட்டோ ஜி06 பவர் 5ஜி (moto g06 power 5G) போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய மோட்டோ போன் நாளை மதியம் 12 மணி அளவில் பிளிப்கார்ட் தளத்தில் அறிமுகமாகும். இந்நிலையில் இந்த புதிய போனின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்த தகவல்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
மோட்டோ ஜி06 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.13,000 அல்லது ரூ.13,400 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த மோட்டோ போனில் உள்ளன.

மோட்டோ ஜி06 பவர் 5ஜி அம்சங்கள் (moto g06 power 5G Specifications): சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் மீடியடெக் ஹீலியோ ஜி81-எக்ஸ்ட்ரீம் சிப்செட் கொண்டுள்ளது மோட்டோ ஜி06 பவர் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் ஏஆர்எம் மாலி-ஜி52 எம்பி2 ஜிபியு (ARM Mali-G52 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.
குறிப்பாக 6.88-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதி மோட்டோ ஜி06 பவர் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது. 1640 × 720 பிக்சல்ஸ், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்,கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3 protection), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இதன் டிஸ்பிளேவில் உள்ளன.
ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இயங்குகிறது மோட்டோ ஜி06 பவர் 5ஜி ஸ்மார்ட்போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது.
அதுவும் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் மோட்டோ ஜி06 பவர் 5ஜி போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய மோட்டோ போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
50எம்பி டூயல் ரியர் கேமரா கொண்டுள்ளது மோட்டோ ஜி06 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் . குறிப்பாக இதன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல சிறப்பான கேமரா அம்சங்கள் உள்ளன.
அதேபோல் பான்டோன் டேபஸ்ட்ரி (Pantone Tapestry), டென்ட்ரில் (Tendril) உள்ளிட்ட நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கும். 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
மோட்டோ ஜி06 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது . பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 6.0, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட் பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications








