Home
Mobile

பார்க்கவே அட்டகாசமா இருக்குதே.. 5200mAh பேட்டரி.. IP64 ரேட்டிங்.. அறிமுகமானது புது மோட்டோ போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோ ஜி06 (moto g06) ஸ்மார்ட்போனை தற்போது அறிமுகம் செய்துள்ளது. ஐபி64 ரேட்டிங், 5200எம்ஏஎச் பேட்டரி மீடியாடெக் சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த மோட்டோ போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய மோட்டோ ஜி06 போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மோட்டோ ஜி06 அம்சங்கள்: தரமான ஆக்டோ-கோர் மீடியடெக் ஹீலியோ ஜி81-அல்ட்ரா (Octa Core MediaTek Helio G81-Ultra) சிப்செட் உடன் இந்த புதிய மோட்டோ ஜி06 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் ஏஆர்எம் மாலி-ஜி52 எம்பி2 ஜிபியு (ARM Mali-G52 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.

பார்க்கவே அட்டகாசமா இருக்குதே.. எந்த மாடல்?

அதேபோல் 6.88-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் மோட்டோ ஜி06 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1640 × 720 பிக்சல்ஸ், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3 protection), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

அதுவும் ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் மோட்டோ ஜி06 ஸ்மார்ட்போன் அறிமுகமானது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது.

குறிப்பாக 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் மோட்டோ ஜி06 போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய மோட்டோ போனில் உள்ளது.

இந்த மோட்டோ ஜி06 ஸ்மார்ட்போன் 50எம்பி ரியர் கேமராவுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல சிறப்பான கேமரா அம்சங்கள் உள்ளன.

மேலும் 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

5200mAh பேட்டரி வசதியுடன் மோட்டோ ஜி06 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 10W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 6.0, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

குறிப்பாக இந்த மோட்டோ ஜி06 ஸ்மார்ட்போன் முதலில் ஐரோப்பாவில் விற்பனைக்கு வரும். அதன்பின்பு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனின் விலை வெளியாகவில்லை. விரைவில் இதன் விலை, விற்பனை விவரங்கள் வெளியாகும் அப்போது அப்டேட் செய்கிறோம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G06 launched with IP64 rated body: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X