Home
Mobile

வருது.. வருது.. விலகு.. விலகு.. புது Moto போன் வெளியே வருது.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ ஜி06 (Moto G06) ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த மோட்டோ 06 ஸ்மார்ட்போனின் படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

வாட்டர் டிராப் நாட்ச் (water drop notch) டிஸ்பிளே வசதி இந்த புதிய மோட்டோ ஜி06 ஸ்மார்ட்போனில் உள்ளது. அதேபோல் டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோ போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

வருது.. வருது.. விலகு.. விலகு.. புது மோட்டோ போன் வெளியே வருது..

மோட்டோ ஜி06 அம்சங்கள் (Moto G06 Specifications): 6.88-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் மோட்டோ 06 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி (Pixel Density), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. எனவே இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

தரமான மீடியாடெக் ஜி81 எக்ஸ்ட்ரீம் எஸ்ஒசி (MediaTek's Helio G81 Extreme SoC) சிப்செட் உடன் மோட்டோ ஜி06 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்பகளையும் தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் மோட்டோ ஜி06 ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த புதிய மோட்டோ போனில் உள்ளன.

4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என் இரண்டு வேரியண்ட்களில் மோட்டோ ஜி06 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

வருது.. வருது.. விலகு.. விலகு.. புது மோட்டோ போன் வெளியே வருது..

ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் மோட்டோ ஜி06 போன் வெளியாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியும் இந்த புதிய மோட்டோ போனில் உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) இந்த புதிய போனில் உள்ளன. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.

5200mAh பேட்டரி வசதியுடன் மோட்டோ ஜி06 ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் எடை 194 கிராம் ஆகும். வைஃபை, ஜபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, புளூடூத் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உடன் இந்த போன் வெளிவரும். ஆன்லைனில் வெளியான தகவலின்படி ரூ.12,245 விலையில் இந்த புதிய மோட்டோ ஜி06 போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

photo credit: xpertpick

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G06 full specifications and price leaked online: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X