இதுதான் புதிய Moto போன்.. ஆண்ட்ராய்டு 15 OS.. 5100mAh பேட்டரி.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ ஜி06 (Moto G06) ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் பல அசத்தலான அம்சங்களுடன் கம்மி விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மோட்டோ ஜி06 போனின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் படங்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.
வாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது புதிய மோட்டோ ஜி06 ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனில் எல்இடி பிளாஸ் ஆதரவு கொண்ட டூயல் ரியர் கேமரா வசதி உள்ளது. குறிப்பாக இந்த புதய மோட்டோ போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

மோட்டோ ஜி06 அம்சங்கள் (Moto G06 Specifications): 5100mAh பேட்டரி வசதியுடன் மோட்டோ ஜி06 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 10W சார்ஜிங் வசதியும் உள்ளது. பான்டோன் டேபஸ்ட்ரி (Pantone Tapestry), டென்ட்ரில் (Tendril) நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும்.
சக்திவாய்ந்த மீடியாடெக் ஜி81 எக்ஸ்ட்ரீம் எஸ்ஒசி (MediaTek's Helio G81 Extreme SoC) சிப்செட் உடன் மோட்டோ ஜி06 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் இந்த மோட்டோ போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி வசதியுடன் இந்த மோட்டோ ஜி06 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. பின்பு இந்த போனின் வலது பக்கத்தில் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன்கள் உள்ளன. யுஎஸ்பி டைப்-சி, ஸ்பீக்கர்கள், மைக்ரோஃபோன் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும்.
தற்போது மோட்டோ ஜி06 ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த மோட்டோ ஜி06 போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும். மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ ஜி96 போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
மோட்டோ ஜி96 5ஜி அம்சங்கள் (Moto G96 5G Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் உடன் இந்த மோட்டோ ஸ்மார்ட்போன். மேலும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த போனில் உள்ளது.
6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த போன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2400 x 1080 பிக்சல்கள், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன் ,1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் , 300Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
இந்த மோட்டோ போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதி இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மோட்டோ ஜி96 5ஜி ஸ்மார்ட்போன் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.

அதேபோல 5500mAh பேட்டரி வசதியுடன் மோட்டோ ஜி96 5ஜி போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. பான்டோன் கிரீனர் பாஸ்ச்சர்ஸ் (PANTONE Greener Pastures), பான்டோன் ஆஷ்லீ ப்ளூ (PANTONE Ashleigh Blue), பான்டோன் கேட்லியா ஆர்க்கிட் (PANTONE Cattleya Orchid), பான்டோன் டிரெஸ்டன் ப்ளூ (PANTONE Dresden Blue) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
குறிப்பாக IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த புதிய மோட்டோ ஜி96 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் விலை ரூ.17,999-ஆக உள்ளது.
photo credit: ytechb.com


Click it and Unblock the Notifications








