SALE பிச்சிக்க போகுது.. ரூ.10,000-ஐ விட கம்மி விலை.. கொரில்லா டிஸ்பிளே, 50MP கேம், டால்பி அட்மோஸ், 5200mAh!
ஒரு பேச்சுக்கு வேண்டுமானால்.. "ஒட்டுமொத்த இந்தியாவும்" ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பில்ஸ் 13ஆர் ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்திற்காக காத்திருக்கிறது என்று கூறலாம். ஆனால் உண்மை என்னவென்றால்.. 2025 இல் புதிய ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட அனைவருமே.. பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை குறிவைப்பது இல்லை. பாதிக்கு பாதி பேர் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை எதிர்பார்க்கின்றன.
அப்படியான ஒரு ஸ்மார்ட்போன் ஜனவரி 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் ஆகிய இரண்டும் எந்த தேதியில் இந்தியாவில் அறிமுகமாகிறதோ, அதே தேதியில்.. மோட்டோரோலா நிறுவனம் அதன் சூப்பர்-பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்கிறது. அது என்ன மாடல்? என்னென்னஅம்சங்களை கொண்டிருக்கும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? மோட்டோரோலா நிறுவனம் அதன் ஜி-சீரிஸின் கீழ் ஒரு புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அது கடந்த (2024 டிசம்பர்) மாதம் உலக சந்தைகளில் அறிமுகமான மோட்டோ ஜி05 (Moto G05) ஸ்மார்ட்போனாகும். இது 2024 பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோ ஜி04 (Moto G04) மாடலின் அப்கிரேடட் வெர்ஷன் ஆக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
என்னென்ன அம்சங்கள்? மோட்டோ ஜி05 ஸ்மார்ட்போனின் மைக்ரோசைட்டின் படி, இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், கொரில்லா கிளாஸ் 3 மற்றும் வாட்டர் டச் டெக்னாலஜி உடனான 6.67-இன்ச் டிஸ்பிளே கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது க்ரீன் மற்றும் ரெட் கலர்களில் வேகன் லெதர் பேனலுடன் வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது
பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக இருந்தாலும் கூட, இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரை கொண்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, மோட்டோ ஜி05 ஸ்மார்ட்போனில் 50எம்பி ப்ரைமரி ரியர் கேமரா உள்ளது மற்றும் முன்பக்கத்தில் 8எம்பி செல்பீ ஸ்னாப்பர் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோவிற்கான ஆதரவும் இருக்கும்.
சிப்செட்டை பொறுத்தவரை, மோட்டோ ஜி05 ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி81 எக்ஸ்ட்ரீம் சிப்செட் மூலம் இயக்கப்படுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படும். இந்த ஸ்மார்ட்போனில் விர்ச்சுவல் ரேம் தொழில்நுட்பம் இருப்பதாகவும் டீஸ் செய்யப்படுகிறது. பேட்டரியை பொறுத்தவரை 18W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,200mAh பேட்டரியை பேக் செய்யும்.
என்ன விலை? மோட்டோ ஜி5 ஸ்மார்ட்போன் ஆனது ஜனவரி 7 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்க கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எதிர்பார்க்க்கப்படும் விலையை பொறுத்தவரை, மோட்டோ ஜி04 ஸ்மார்ட்போன் ரூ.6,999 க்கு அறிமுகம் ஆனதை கருத்தில் கொண்டால், மோட்டோ ஜி05 மாடலின் விலை எப்படி பார்த்தாலும் ரூ.10,000 க்குள் தான் இருக்கும்
மோட்டோ ஜி05 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்பாக (அதாவது ஜனவரி 6 ஆம் தேதியன்று) ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது சூப்பர் பட்ஜெட் விலையில்.. அதாவது ரூ.10,000 க்குள் அல்லது அதற்கு நெருக்கமான விலை நிர்ணயம் கொண்ட 5ஜி ஸ்மார்ட்போன்களை தேடுபவர்களை குறிவைத்து அறிமுகமாகும் ஒரு மாடலாகும்.
ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஏஐ ஆதரவு கொண்ட 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சாரை கொண்டிருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது எச்டி பிளஸ் ரெசல்யூஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.88 இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும்
மேலும் ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போனில் நீல ஒளி உமிழ்வுகளுக்கான TÜV ரைன்லேண்ட் சான்றிதழ், TÜV ரைன்லேண்ட் ஃப்ளிக்கர் இலவச சான்றிதழ் மற்றும் சர்க்காடியன் சான்றிதழ், டூயல் சிம் கனெக்டிவிட்டி, ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட், 18W சார்ஜிங் ஆதரவு உடனான 5160mAh பேட்டரி ஆகிய அம்சங்களும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








