Home
Mobile

ஆளுக்கு 2 ஆர்டர்.. ரூ.6,499-க்கு Moto போன்.. 5200mAh பேட்டரி.. 50MP கேமரா.. 18W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் 5200mAh பேட்டரி, 50 எம்பி கேமரா, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட மோட்டோ ஜி05 (moto g05) போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. மலிவான விலைக்கு வீகன் லெதன் பேனலுடன் வாங்க கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வருவதால், இந்த பட்ஜெட்டில் டியூரபிலிட்டி எதிர்பார்க்க முடிகிறது. இந்த மோட்டோ ஜி05 போனின் விலை, தள்ளுபடி மற்றும் அம்சங்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.6,999ஆக இருக்கிறது. இந்த விலை தள்ளுபடி போக கிடைக்கும் விலையாகும். இதுபோக குறிப்பிட்ட கிரெடிட் கார்டுக்கு ரூ.350 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.6,499 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு நம்ப முடியாத டிசைன் மற்றும் பீச்சர்கள் உள்ளன.

ஆளுக்கு 2 ஆர்டர்.. ரூ.6,499-க்கு Moto போன்.. 5200mAh பேட்டரி.. மாடல்?

அதாவது, வீகன் லெதர் பேனல் டிசைனில் பிரீமியம் லுக் கொடுப்பது மட்டுமல்லாமல், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு கிடைக்கிறது. அதேபோல IP52 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash resistant) கிடைக்கிறது. ஃபாரஸ்ட் கிரீன் (Forest Green) மற்றும் ப்ளம் ரெட் (Plum Red) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்யலாம்.

மோட்டோ ஜி05 அம்சங்கள் (moto g05 Specifications): இந்த மோட்டோவுக்கு ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி81 அல்ட்ரா (Octa Core MediaTek Helio G81 Ultra) சிப்செட் மற்றும் மாலி ஜி52 ஜிபியு (Mali G52 GPU) கிராபிக்ஸ் கார்டுடன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. 64 ஜிபி ஸ்டோரேஜ் மட்டுமல்லாமல், 1 டிபிக்கு மைக்ரோஎஸ்டி கார்டு பயன்படுத்த முடியும்.

அதேபோல கார்னிங் கொரில்லா கிளாஸ் 2 புரொடெக்சன் மட்டுமல்லாமல், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கும்படியான 6.67 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, பட்ஜெட்டுக்கு ஏற்ப அவுட்புட் எதிர்பார்க்க முடியும்.

வீகன் லெதர் பேனலுடன் கேமரா பம்ப் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் செகண்டரி லென்ஸ் சப்போர்ட் உள்ளது. இந்த மோட்டோ ஜி05 போனுக்கு 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சப்போர்ட் கிடைக்கிறது. 2 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் கொடுக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அதிகமாக இருப்பதால், ஓஎஸ் அப்டேட் கிடைக்கவில்லை.

இந்த மோட்டோ போனில் 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாத மற்றொரு பீச்சராக ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆடியோ சப்போர்ட் கிடைக்கிறது. அதேபோல பேக்கப் சிஸ்டம் பட்டையை கிளப்பி இருக்கிறது. அதாவது, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 5200mAh பேட்டரி கிடைக்கிறது.

சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சாரும் உள்ளது. இந்த மோட்டோ ஜி05 ஒரு 4ஜி மாடலாக இருப்பதால், அதற்கேற்ப கனெக்டிவிட்டி பீச்சர்கள் கிடைக்கின்றன. ஆகவே, டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802) மற்றும் ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கிடைக்கிறது. இதுபோக ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டியும் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
moto g05 With 50MP Camera Gets Discount on Flipkart Check New Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X