Home
Mobile

ஆளுக்கு 2 ஆர்டர்.. மட்ட விலைக்கு Moto போன்.. 50 எம்பி கேமரா.. 5200mAh பேட்டரி.. 64 ஜிபி மெமரி.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் மலிவு விலை மாடலாக வெளியான மோட்டோ ஜி05 (Moto g05) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. 50 எம்பி கேமரா, 5200 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 64 ஜிபி மெமரி போன்ற பீச்சர்களை கொண்டுள்ளது. இந்த போனுக்கு கிடைக்கும் தள்ளுபடி மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு 27 சதவீத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.7,299 விலைக்கு இப்போது வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.365 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.6,934 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

மோட்டோ ஜி05 அம்சங்கள் (Moto g05 Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி81 அல்ட்ரா (Octa Core MediaTek Helio G81 Ultra) சிப்செட் கொண்ட மாடலாக இந்த மோட்டோ ஜி05 கிடைக்கிறது. மாலி ஜி52 எம்பி2 ஜிபியு (Mali G52 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டை கொண்டுள்ளது, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுக்கிறது.

ஆளுக்கு 2 ஆர்டர்.. மட்ட விலைக்கு Moto போன்.. 50 எம்பி கேமரா.. மாடல்?

2 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை இந்த மோட்டோ ஜி05 போன் கொண்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பை கொடுத்துள்ளது. 6.67 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுக்கிறது. 1604 x 720 பிக்சல்கள் எச்டி பிளஸ் (HD+) ரெசொலூஷனை கொடுத்துள்ளது. 90 Hz ரெஃப்ரெஷ் ரேட்டை பெறலாம்.

மேலும், இந்த டிஸ்பிளேவுக்கு 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 4 ஜிபி ரேம் கொடுத்தது போக 8 ஜிபிக்கு விர்ச்சுவல் ரேம் சப்போர்ட்டை இந்த மோட்டோ ஜி05 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டை இந்த மோட்டோ போனில் பயன்படுத்த முடியும். அதற்கான சிலாட் இதில் கிடைக்கிறது.

இந்த விலையிலும் 50 எம்பி பிரைமரி கேமராவையும், வீடியோ கால்கள் மற்றும் செல்பீகளுக்காக 8 எம்பி செல்பீ கேமராவையும் இந்த மோட்டோ ஜி05 ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது. இந்த கேமராவுக்கு குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) கொடுக்கப்படுகிறது. மேலும், பிடிஏஎப் (PDAF) சப்போர்ட் கிடைக்கிறது.

மேலும், நைட் விஷன், லைவ் பில்டர் போன்ற பீச்சர்களை கொடுத்துள்ளது. அதேபோல மேஜிக் எரைசர், போட்டோ அன்பிளர், மேஜிக் எடிட்டர், போர்ட்ராய்டு லைட், சினிமாடிக் போட்டோஸ் போன்ற பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாத கேமரா பீச்சர்களையும் இந்த மோட்டோ ஜி05 ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது.

டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கிடைத்துள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொடுக்கப்படுகின்றன. இந்த மோட்டோ போனுக்கு சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor) கிடைத்துள்ளது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கும் 5200mAh பேட்டரியை இந்த மோட்டோ போன் கொடுத்துள்ளது.

IP52 தரத்திலான டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் வருகிறது. டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டி ஆதரவுகளை இந்த மோட்டோ போன் கொடுக்கிறது. ஃபாரஸ்ட் கிரீன் (Forest Green) மற்றும் பிளம் ரெட் (Plum Red) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto g05 With 4GB RAM 50MP Camera Discount on Flipkart Check New Price Here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X