கியூ கட்டி வாங்குவீங்க.. 50எம்பி கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புது Moto போன்கள்.. எந்த மாடல்?
மோட்டோரோலா (Motorola) நிறுவனம் அடுத்து மோட்டோ ஜி05 மற்றும் மோட்டோ ஜி15 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது வரும் வாரங்களில் இந்த புதிய போன்கள் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் மோட்டோ ஜி05 (Moto G05) மற்றும் மோட்டோ ஜி15 (Moto G15) போன்களின் புகைப்படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளன.
குறிப்பாக பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) உடன் மோட்டோ ஜி05 மற்றும் மோட்டோ ஜி15 போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளன இந்த மோட்டோ போன்கள். மேலும் இந்த இரண்டு போன்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

மோட்டோ ஜி15 அம்சங்கள் (Moto G15 Specifications): கிரே (Grey), கிரீன் (Green) நிறங்களில் இந்த புதிய மோட்டோ ஜி15 போன் அறிமுகமாகும். மேலும் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256எம்பி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் மோட்டோ ஜி15 போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
Hello UI சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி15 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) ஆதரவு கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி15 போன்.
50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் மோட்டோ ஜி15 போன் அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவரும். மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன. அதேபோல் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் மோட்டோ ஜி15 போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
மோட்டோ ஜி05 அம்சங்கள் (Moto G05 Specifications): ஆரஞ்சு (Orange), கிரே (Grey), கிரீன் (Green) நிறங்களில் இந்த புதிய மோட்டோ ஜி15 போன் அறிமுகமாகும். மேலும் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128எம்பி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் மோட்டோ ஜி15 போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
குறிப்பாக மீடியாடெக் சிப்செட் உடன் இந்த மோட்டோ ஜி05 போன் வெளிவரும். Hello UI சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) ஆதரவு கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி05 போன்.

அதேபோல் 50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் மோட்டோ ஜி05 போன் அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவரும். மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன. அதேபோல் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் மோட்டோ ஜி05 போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மோட்டோ ஜி15 மற்றும் மோட்டோ ஜி05 போன்கள் ரூ.15,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த இரண்டு போன்களும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளன.
Photo Credit: YTechB


Click it and Unblock the Notifications








