காத்திருப்பு ஓவர்.. ரூ.6,999 பட்ஜெட்ல 50எம்பி கேமரா, டால்பி அட்மாஸ்.. அறிமுகமானது புது Moto போன்.. எந்த மாடல்?
மோட்டோரோலா (motorola) நிறுவனம் தனது புதிய மோட்டோ ஜி05 (Moto G05) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக மீடியாடெக் சிப்செட், 50எம்பி கேமரா, டால்பி அட்மாஸ் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் மலிவு விலையில் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய மோட்டோ போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
மோட்டோ ஜி05 அம்சங்கள் (Moto G05 Specifications): 6.67-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் ஆஸ்பெக்ட் ரேஷியோ (20:9 aspect ratio), 1000 நிட்ஸ் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3 protection), 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

அதேபோல் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி81-அல்ட்ரா (Octa Core MediaTek Helio G81-Ultra) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி05 போன். மேலும் ஏஆர்எம் மாலி-ஜி52 எம்பி2 ஜிபியு (ARM Mali-G52 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். குறிப்பாக மேம்பட்ட செயல்திறன் வழங்கும் இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட்.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி05 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு அதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த மோட்டோ ஜி05 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos),எப்எம் ரேடியோ உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த அசத்தலான மோட்டோ ஜி05 போனில் உள்ளன.
5200mAh பேட்டரி உடன் இந்த மோட்டோ ஜி05 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சாரஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and Splash resistant) கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி05 போன். மேலும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அதேபோல் ஃபாரெஸ்ட் கிரீன் மற்றும் பிளம் ரெட் நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கெண்ட மோட்டோ ஜி05 போனின் விலை ரூ.6,999-ஆக உள்ளது. பின்பு ஜனவரி 13-ம் தேதி பிளிப்கார்ட், மோட்டோரோலா.இன் போன்ற தளங்களில் இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








