Home
Mobile

முரட்டு பட்ஜெட்.. வெறும் ரூ.6,999 போதும்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?

மோட்டோ (Moto) பிரியர்கள் மட்டுமல்லாமல், மற்ற ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கும், இந்த பட்ஜெட்ல எப்படிங்க முடியுது? என்று கேட்கும் அளவுக்கு கம்மி விலையில் 50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், 1டிபி மெமரி, எச்டிபிளஸ் டிஸ்பிளே, டால்பி அட்மோஸ் ஆடியோ போன்ற பக்கா பீச்சர்கள் மட்டுமல்லாமல், முரட்டு டிசைனில் மோட்டோ ஜி04எஸ் (Moto G04s) போன் வெளியாகி இருக்கிறது. இந்த மோட்டோ போனின் விலை, விற்பனை மற்றும் பீச்சர்கள் குறித்த முழு விவரங்கள் இதோ.

மோட்டோ ஜி04எஸ் விலை (Moto G04s Price): இந்த மோட்டோவின் விற்பனை வரும் ஜூன் 5ஆம் தேதி தொடங்குகிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது. இந்த போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.6,999ஆக இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் என்னென்ன பீச்சர்களை இது பேக் செய்கிறது.

முரட்டு பட்ஜெட்.. ரூ.6,999 போதும்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி போன்!

மோட்டோ ஜி04எஸ் அம்சங்கள் (Moto G04s Specifications): இந்த மேட்டோ பிரீமியம் டிசைனில் சாடின் ப்ளூ (Satin Blue), கான்கார்ட் பிளாக் (Concord Black), சீ கிரீன் (Sea Green) மற்றும் சன்ரைஸ் ஆரஞ்ச் (Sunrise Orange) ஆகிய 4 கலர்களில் வெளியாகி இருக்கிறது. பஞ்ச்-ஹோல் (Punch-hole) ஃப்ரன்ட் டிசைன் கொண்டிருக்கிறது.

இந்த பட்ஜெட்டில் மூக்கில் விரல் வைக்கும்படி ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. மோட்டோவின் மை யுஎக்ஸ் (My UX) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி606 12என்எம் (Octa Core Unisoc T606 12nm) சிப்செட் மற்றும் மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் சப்போர்ட் வருகிறது.

இந்த மோட்டோ ஜி04எஸ் போனில் 4 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dynamic RAM) மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது. டிஸ்பிளே பீச்சர்களை பார்க்கையில் 6.6 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) பேனல் கொண்டிருக்கிறது.

முரட்டு பட்ஜெட்.. ரூ.6,999 போதும்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி போன்!

இந்த டிஸ்பிளேவுக்கு 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 537 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சன் (Corning Gorilla Glass 3 Protection) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Scanner) வருகிறது. IP52 வாட்டர் ரெபெல்லென்ட் சப்போர்ட் கொண்டுள்ளது.

இந்த மோட்டோ ஜி04எஸ் போனில் பிடிஏஎப் (PDAF) சப்போர்ட் கொண்ட 50 எம்பி ரியர் கேமரா வருகிறது. இந்த கேமராவில் ஃபுல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் மற்றும் நைட் விஷன் (Night Vision), போர்ட்ராய்டு போட்டோ (Portrait Photo) போன்ற பீச்சர்கள் வருகின்றன. பேஸ் ரீடச் (Face Retouch) மற்றும் போர்ட்ராய்டு பீச்சருடன் 5 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.

இந்த மோட்டோவில் 15W சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி வருகிறது. டூயல் சிம் சிலாட், மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் கொண்டிருக்கிறது. 3.5 எம்எம் இயர்போன் ஜாக் மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் வருகிறது. டால்பி அட்மோஸ் சப்போர்ட் உள்ளது. இதுவொரு 4ஜி மாடலாகும். ஆகவே, டூயல் 4ஜி எல்டிஇ கனெக்டிவிட்டி உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G04s With 50MP Camera Launched Under Rs 7000 Sale From June 5 in Flipkart Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X