Home
Mobile

லட்டு மாதிரி பட்ஜெட்.. ரூ.10750 போதும்.. QUAD கேமரா.. 1TB மெமரி.. 15W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

மோட்டோ பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பட்ஜெட் பிரியர்களும் மூக்கில் விரல் வைக்கும்படியான பட்ஜெட்டில் குவாட் பிக்சல் கேமரா, 16 ஜிபி ரேம், 15W சார்ஜிங் போன்ற பீச்சர்களுடன் மோட்டோ ஜி04எஸ் (Moto G04s) போன் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

மோட்டோ ஜி04எஸ் அம்சங்கள் (Moto G04s Specification): 6.6 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சன் (Corning Gorilla Glass 3 Protection) மற்றும் 537 நிட்ஸ் பிரைட்னஸ் சப்போர்ட் வருகிறது.

ரூ.10750 போதும்.. QUAD கேமரா.. 1TB மெமரி.. 15W சார்ஜிங்.. எந்த போன்?

இந்த மோட்டோவில் பேஸ் டிடெக்சன் ஆட்டோ போகஸ் (Phase Detection Auto Focus) மற்றும் குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) சப்போர்ட் கொண்ட 50 எம்பி கேமரா வருகிறது. போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), நைட் விஷன் (Night Vision) மற்றும் எச்டிஆர் (HDR) போன்ற ஏஐ சப்போர்ட் (AI Support) பீச்சர்கள் வருகின்றன.

5 எம்பி செல்பீ ஷூட்டர் கொண்டிருக்கிறது. கம்மி பட்ஜெட்டிலும் ஆக்டா கோர் சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. யுனிசோக் டி606 12என்எம் (Unisoc T606 12nm) பிராசஸர் மற்றும் மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், மை யுஎக்ஸ் (My UX) சப்போர்ட் உள்ளது.

இந்த மோட்டோவில் 2 ரேம் வேரியண்ட்கள் வருகிறது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. 8 ஜிபி ரேம் மாடலில் 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dynamic RAM) வருகிறது. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) பயன்படுத்தலாம். ஆகவே, மீடியம் பர்ஃபாமென்ஸ் மல்டி டாக்ஸ்கிங் எதிர்பார்க்கலாம்.

ரூ.10750 போதும்.. QUAD கேமரா.. 1TB மெமரி.. 15W சார்ஜிங்.. எந்த போன்?

கிளாரிட்டி ஆடியோவுக்காக டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட ஸ்பீக்கர்கள் வருகின்றன. 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack), டைப்-சி போர்ட் (Type-C Port), டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) வருகிறது.

இந்த மோட்டோ ஜி04எஸ் போனில் IP52 வாட்டர் ரெபிலென்ட் (Water Repellent) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் மோட்டோ போன்களில் கொடுக்கப்படும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி வருகிறது. டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G LTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டி வருகிறது.

சாடின் ப்ளூ (Satin Blue), கான்கார்ட் பிளாக் (Concord Black), சீ கிரீன் (Sea Green) மற்றும் சன்ரைஸ் ஆரஞ்சு (Sunrise Orange) ஆகிய 4 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போனின் ஆரம்ப விலை ரூ.10,750ஆக இருக்கிறது. இந்த விலை ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்கா நாடுகளில் நிர்ணயம் செய்யப்பட்டதாகும்.

இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் அடுத்த சில வாரங்களில் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே, மோட்டோ ஜி04 போன் இந்திய மார்கெட்டில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இப்போது, அதேபோல கம்மியான பட்ஜெட்டில் இந்த போன் வெளியானால், விற்பனையில் சக்கைப்போடு போட வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G04s With 50MP Camera, 16GB RAM, 5000mAh Battery Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X