அடுத்த வாரம் கன்ஃபார்ம்.. 5000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 128ஜிபி மெமரி.. களமிறங்கும் Moto போன்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனை அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்நிறுவனம் மோட்டோ ஜி04எஸ் ((Moto G04s) எனும் ஸ்மார்ட்போனை தான் அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த மோட்டோ ஜி04எஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஏற்கனவே ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் இந்தியாவுக்கு வரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாகியுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

மோட்டோ ஜி04எஸ் அம்சங்கள் (Moto G04s Specification): 6.6 இன்ச் எச்டிபிளஸ் (HD+) ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த போன். மேலும் 1612 x 720 பிக்சல்ஸ், 90Hz ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சன் (Corning Gorilla Glass 3 Protection), 537 நிட்ஸ் பிரைட்னஸ் சப்போர்ட் உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
அதேபோல் தரமான ஆக்டா கோர் யுனிசோக் டி606 12என்எம் (Unisoc T606 12nm) பிராசஸர் மற்றும் மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த மோட்டோ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இயங்குகிறது மோட்டோ ஜி04எஸ் ஸ்மார்ட்போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த போனில் மை யுஎக்ஸ் (My UX) சப்போர்ட் உள்ளது. மேலும் கிளாரிட்டி ஆடியோவுக்காக டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ போன்.
50எம்பி சிங்கிள் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது மோட்டோ ஜி04எஸ் ஸ்மார்ட்போன். மேலும் போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), நைட் விஷன் (Night Vision) மற்றும் எச்டிஆர் (HDR) போன்ற ஏஐ சப்போர்ட் (AI Support) ஏஐ சப்போர்ட் (AI Support) போன்ற பல கேமரா அம்சங்கள் இதில் உள்ளன. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன்.
குறிப்பாக பேஸ் டிடெக்சன் ஆட்டோ போகஸ் (Phase Detection Auto Focus) மற்றும் குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) சப்போர்ட் கொண்டுள்ளது புதிய மோட்டோ போன். பின்பு இந்த போனுக்கு IP52 வாட்டர் ரெபிலென்ட் (Water Repellent) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த போன் விற்பனைக்கு வரும்.
5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு மோட்டோ ஜி04எஸ் போன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G LTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டி இதில் உள்ளது.

இந்தியாவில் சாடின் ப்ளூ (Satin Blue), கான்கார்ட் பிளாக் (Concord Black), சீ கிரீன் (Sea Green) மற்றும் சன்ரைஸ் ஆரஞ்சு (Sunrise Orange) நிறங்களில் மோட்டோ ஜி04எஸ் போன் அறிமுகமாகும். மேலும் இந்த புதிய மோட்டோ போன் ரூ.10,000-க்கு கீழ் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
வரும் மே 30-ம் தேதி தான் மோட்டோ ஜி04எஸ் இந்தியாவில் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளிப்கார்ட் தளத்தில் இந்த புதிய போனை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








