அதிர போகுது மார்க்கெட்.. 6.5-இன்ச் டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. வருகிறது மோட்டோ போன்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் இந்த பல அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி அடுத்த வாரம் மோட்டோ ஜி34 5ஜி எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதன்பின்பு மோட்டோ ஜி04 (Moto G04) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.
தற்போது UAE TDRA சான்றிதழ் தளத்தில் காணப்பட்டுள்ளது. எனவே இந்த மோட்டோ ஜி04 விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த மோட்டோ ஜி04 ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோ ஜி04 அம்சங்கள் (Moto G04 Specifications): 6.55-இன்ச் எச்டி பிளஸ் ( HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி04 ஸ்மார்ட்போன். பின்பு 1612 x 720 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி04 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த இதில் ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யுனிசாக் டி606 சிப்செட் (Unisoc T606 SoC) வசதியுடன் இந்த மோட்டோ ஜி04 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் My UX சார்ந்த ஆண்ட்ராய்டு 14 ( Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த மோட்டோ ஜி04 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்ட 16எம்பி ரியர் கேமராவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி04 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவை கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ஆரஞ்சு, பச்சை, நீலம் மற்றும் கருப்பு நிறங்களில் மோட்டோ ஜி04 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு 5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி04 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 10 வாட்ஸ் சார்ஜிங் வசதி உள்ளது.
யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் ( 3.5mm audio jack), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB-C port) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் கொண்டுள்ளது மோட்டோ ஜி04 ஸ்மார்ட்போன். அதேபோல் 180 கிராம் எடை உடன் இந்த மோட்டோ ஜி04 ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் கம்மி பட்ஜெட்டில் அறிமுகமாகும்.
அதேபோல் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி34 5ஜி மாடல் ஆனது 5000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. பின்பு இந்த மோட்டோ ஜி34 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.11,900 விலையில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








